search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல்"

    • கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
    • பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் உள்ள 2-ம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 300 பயணிகள் பயணிக்கும் ஏ.சி. வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இதற்கான அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.

    புதுவையில் இருந்து செல்லும் கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதனால் தமிழக பகுதியை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.

    • காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • குளச்சல் மரைன் போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பொனிப்பாஸ்.இவரது மகன் ஆன்றனி சபில் ராஜ் (வயது 33).

    இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ந் தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து இவரது படகு மீன் பிடிக்க சென்றது. கலஸ்டின் (44) என்பவர் படகை ஓட்டினார்.

    படகில் வடமாநில தொழி லாளர்கள் 6 பேரும், குமரி மாவட்ட தொழிலாளர்கள் 7 பேரும் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்களது விசைப்படகு முட்டம் கடலில் 34 நாட்டிங் கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கெமிக்கல் டேங்கர் கப்பல், எதிர்பாராத வித மாக படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படகின் முன்பகுதி சேதமடைந்தது.

    மேலும் படகில் இருந்த மேற்கு வங்காளம் மீனவர் வினோத் புதிர் (46), வாணியக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (36), பூத்துறையை சேர்ந்த கில்பர்ட் (51) ஆகியோர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றினர். இருப்பினும் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    அவர்கள் நேற்று மாலை குளச்சல் துறைமுகம் வந்தனர். உடனடியாக 4 பேரும் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படகு மீது கப்பல் மோதியது குறித்து மீனவர்கள் புகார் செய்ததன் பேரில் குளச்சல் மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மோதிவிட்டு சென்ற வெளி நாட்டு கப்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் குமரி கடலில் லைபீரியா நாட்டு எண்ணை கப்பல் விசைப் படகு மீது மோதிச் சென்ற நிலை யில் தற்போது மீண்டும் மற்றொரு படகு மீது கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமேசுவரம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.
    • பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    ராமேசுவரம்

    புதுச்சேரி, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு சொகுசு பயணிகள் கப்பல் இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் பேரில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் இணைந்த பகுதியில் பாம்பன் ரெயில் பாலம் அமைந்து ள்ளது. இந்த பாலத்தில் கப்பல்கள் செல்லும் அளவிற்கு கடலில் தோண்டப்பட்டு தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ராமநாத புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர பகுதியின் பொருளா தாரத்தை மேம்படுத்தவும், பாம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கப்பல் செல்லும் கடல் பகுதி வழியாக சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்கவும், பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் கடலை ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்வத ற்காக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகம் ஆகிய துறை அமைக்க எ.வ.வேலு நேற்று மாைல பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவர்கள் கடலில் கப்பல் செல்லும் பகுதியில் ஆழப்படுத்துவது தொடர்பாக வரைபட ங்களை வைத்து ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, ராமேசுவரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாம்பன் பாலத்தில் சுற்றுலா பயணிகள் கப்பல் செல்லும் அளவிற்கு கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் தனுஷ்கோடி-தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கும் தமிழக அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×