search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக் கூட்டம்"

    • தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
    • கிளை செயலாளர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    பாலக்கோடு,

    மாரண்டஅள்ளி பட்டா ளம்மன் கோவில் வளாகத்தில் மாரண்டஅள்ளி தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாளில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

    ஒன்றிய அவைத் தலைவர் தங்கசரவணன் தலைமை வகித்தார்.

    பேரூர் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட பிரதிநிதி சுரேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் எதிந்தர், நகர துணை செயலாளர்கள் வசிஷ்டர், மாதையன், பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதிகள் பாரதிதாசன், குமார், கிருஷ்ணகுமார், செல்வம், மார்கன்டன் மற்றும் கிளை செயலாளர்கள் ,கவுன்சி லர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர்களின் வீடுகளில் கருணாநிதி உருவ படத்தை வைத்து அஞ்சலி செலுத்துதல், மாரண்டஅள்ளியில் பிரதான கடை வீதி, மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று 4 முக்கிய இடங்களில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் மற்றும் வருங்காலங்களில் கட்சியில் புதிய உறுப்பி னர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தமிழக அரசை கண்டித்து வருகிற 25-ம் தேதி காலை10 மணிக்கு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், எம்.எல்.ஏக்கள்.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நல்லதம்பி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    தருமபுரி மாவட்டத்திற்கு விரைவில் வருகை தரவுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரியில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, தமிழக அரசை கண்டித்து வருகிற 25-ம் தேதி காலை10 மணிக்கு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கொள்வது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, அவரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வேலுமணி, கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், மதிவாணன், பழனி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர செயலாளர் பூக்கடை ரவி நன்றி கூறினார்.

    • செஞ்சியில் மக்கள் நல பணியாளர்கள், ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்.
    • புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார் .சிறுபான்மையினர் நலத் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதியதாக பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் களுடைய பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் .கேசவலு வரவேற்றார் இதில்செஞ்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் ஒன்றிய செயலாளர்கள் செஞ்சிவி ஜயராகவ ன்மேல்மலையனூர் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மந்தம் மற்றும்ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    ×