search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் மணிமண்டம்"

    • பெருந்தலைவர் காமராஜரின் 120 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 120 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு அரசு மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், தமிழ்நாடு பனைப் பொருள் வாரிய முன்னாள் தலைவர் குமரி அனந்தன், விஜய் வசந்த் எம். பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின்,

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் விஜய்வசந்த்எம்.பி., மாவட்டத் தலைவர் கே டி உதயம், , அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதே போல மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தம்பித்தங்கம், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ×