என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்சூரன்ஸ்"

    • இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.

    இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

    சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயிர் காப்பீடு கட்டிய அனைவருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு கிடைக்க கலெக்டரிடம் பேசி முயற்சி செய்கிறோம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஐ, தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஎம் இணைந்து, பயிர் காப்பீடு கட்டிய அனை வருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தினுடைய சமாதான கூட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தன கோபாலகிருஷ்ணன் தலைமை நடைபெற்றது.

    இந்த சமாதான கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயசீலன் வட்டார புள்ளியல் துறை அலுவலர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன், (சி பி ஐ) தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் (சி பி எம்) இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் பயிர் காப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி முயற்சி செய்கிறோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமாதான கூட்டம் நிறைவுற்றது.

    • சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.
    • தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    நாம் பயன்படுத்தும் சொந்த வாகனம் அல்லது பொதுத்துறை மற்றும் பயணிகள் வாகனம் என்று எதுவாக இருந்தாலும், அந்த வாகனத்துக்குபுகைச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவசியம்.புதுடெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது. அதனால் அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு புகைச்சான்று அவசியம். புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

    புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கப்படுவதில்லை. சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.பிற மாநிலங்களிலும், இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாகனத்திலும் புகைச்சான்றும், இன்சூரன்சும் அவசியம் வைத்திருக்க வேண்டும். தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புகைச்சான்றும், இன்சூரன்சும் காலாவதியாகி இருந்து, அப்போது வாகனம் விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த வாகனத்தை இயக்கியவர், உடன் பயணித்தவர் ஆகிய இரு தரப்பினருக்கும் இன்சூரன்ஸ் பணப்பலன்கள் போய் சேராது. அதை கேட்டும் பெற முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்கின்றனர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள்.

    இதுகுறித்து திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இந்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தின், இப்புதிய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பணப்பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.இதுதொடர்பான வழக்கையும் தொடர முடியாது. அதனால், வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் இன்சூரன்ஸ் மற்றும் புகைச்சான்றை சோதித்து பெற்று வைத்திருப்பது அவசியம் என்றனர். இந்த உத்தரவு திருப்பூர் உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விசாரணையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் கடனை அடைக்கவும் கடத்தி கொலை செய்து எரித்ததாக அதிகாரி தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ரூ.85 லட்சத்தை இழந்தார்.

    பங்கு சந்தையில் ஏற்பட்ட பணத்தை சரி கட்டவும் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனது பெயரில் 25 வெவ்வேறு திட்டங்களில் ரூ 7.40 கோடி இன்சூரன்ஸ் செய்தார்.

    பின்னர் இன்சூரன்ஸ் செய்த பணத்தை பெறுவதற்காக தன்னைப் போன்று அடையாளம் உள்ள ஒருவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு உறுதுணையாக மனைவி மற்றும் 2 உறவினர்களை சேர்த்துக் கொண்டார்.

    கடந்த 8-ந் தேதி நிஜமாபாத் ரெயில் நிலையத்திற்குச் சென்ற அதிகாரியின் உறவினர்கள் அங்கிருந்த அப்பாவி வாலிபர் ஒருவரை வெங்கடாபூர் புறநகர் பள்ளத்தாக்கிற்கு காரில் கடத்தி வந்தனர். அதிகாரியும் அவரது மனைவியும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் வாலிபருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தனர். வாலிபருக்கு அதிகாரியின் உடைகளை அணிவித்து காரின் முன் பகுதியில் உட்காரும்படி தெரிவித்தனர். அதற்கு வாலிபர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வாலிபரை கட்டை மற்றும் கோடாரியால் சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வாலிபரை காரின் முன் சீட்டில் உட்கார வைத்து காரின் உள்ளே வெளியே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் எரிந்துபோன காரில் ஆண் பிணம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிஜமா பாத் போலீசார் காரின் அருகே இருந்த ஒரு பையை எடுத்து சோதனை செய்தனர்.

    அதில் அதிகாரியின் அடையாள அட்டை இருந்தது. அடையாள அட்டையில் இருந்த விலாசத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு வீட்டில் இருந்த அதிகாரி மற்றும் அவரது மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் கடனை அடைக்கவும் தன்னைப் போன்ற ஒருவரை கடத்தி கொலை செய்து எரித்ததாக அதிகாரி தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னாடியே போலீசார் விரைவாக துப்பு துலக்கி கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் கான்கர் போலீசில் புகார் செய்தனர்.
    • கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்தவர் சமீரன் சிக்தர் (வயது 29), தொழில் அதிபர்.

    சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது.

    இதனை சரிகட்ட சமீரன் சிக்தர் பலரிடமும் கடன் வாங்கினார். வங்கியிலும் லோன் எடுத்தார். இதில் அவருக்கு ரூ.35 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை திருப்பி கேட்டு வங்கிகளும், நண்பர்களும் நெருக்கடி கொடுத்தனர்.

    சமீரன் சிக்தர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்கான தவணை தொகையை அவர் முறையாக கட்டி வந்தார். தற்போது அவருக்கு கடன் நெருக்கடி ஏற்பட்டதால் இந்த தவணையையும் கட்ட முடியாமல் அவர் தவித்தார்.

    அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்சூரன்ஸ் எடுத்திருப்பதால் அவர் இறந்தால் குடும்பத்திற்கு ரூ.72 லட்சம் பணம் கிடைக்கும். எனவே இந்த பணத்தை பெற என்ன செய்யலாம் என மீண்டும் தீவிரமாக யோசித்தார்.

    இதில் தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மனதில் ஒரு திட்டம் உருவானது. அதன்படி விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடினால் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணம் ரூ.72 லட்சம் கிடைக்கும். அதில் ரூ.35 லட்சத்தை கடன்காரர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொண்டு தொழிலை விரிவுப்படுத்தலாம் என முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 1-ந்தேதி சமீரன் சிக்தரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் ஒரு காரில் சார்மா பகுதிக்கு சென்றனர்.

    அங்கு தனது நாடகத்தை சமீரன் சிக்தர் அரங்கேற்றினார். அவர் சென்ற காரை ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரித்தார். பின்னர் அந்த காரை தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டார்.

    வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் இதுபற்றி கான்கர் போலீசில் புகார் செய்தனர்.

    கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவரது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

    காரில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று போலீசார் கண்டுபிடிக்க முயன்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அலகபாத், பாட்னா, கவுகாத்தி, ராஞ்சி ஆகிய நகரங்களில் சுற்றிதிரிவது தெரியவந்தது.

    கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலமும், சமீரன் சிக்தர் பயன்படுத்திய செல்போன் மூலமும் இதனை கண்டுபிடித்த போலீசார், அவரை அதிரடியாக தொடர்பு கொண்டனர். பின்னர் அவரை உடனே ஊருக்கு வருமாறு அழைத்தனர். போலீசார் தன்னை கண்டுபிடித்ததை அறிந்து கொண்ட சமீரன் சிக்தர் நேற்று ஊர் திரும்பினார். இதன்மூலம் அவரது நாடகம் முடிவுக்கு வந்தது.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்

    நாகர்கோவில் :

    சுசீந்திரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    சிகிச்சைக்காக பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை மட்டும் இன்சூ ரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மீதி பணத்தையும் தருமாறு கேட்டதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சைக் காக ஏற்கனவே செலவழித்த பணத்தில் மீதித் தொகையான ரூ.20,000, நஷ்ட ஈடு ரூ.5,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் 27,500-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன்.
    • எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் வஞ்சிநகரை சேர்ந்த பிரியா என்பவர் இன்று ஆம்புலன்ஸ் மூலம் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி தனியார் பஸ் மூலம் விபத்து ஏற்பட்டு 3 மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 7 வருடங்கள் ஆகியும் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. தங்களின் உதவி மூலம் கிடைத்த வீரபாண்டி குடியிருப்பு வாரியத்தில் 2-ம் மாடியில் வசித்து வந்தேன்.

    ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன். எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது. இதனால் எனது சித்தி வீட்டில் வசித்து வருகிறேன். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவுகள் செய்து வருகிறோம்.

    எனவே நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் ,குடியிருப்பில் கீழ் பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
    • இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

    இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

    மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.

    இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.

    பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.

    இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

    இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோர்ட்டு மூலம் கண்டுபிடிக்கப்படும்போது, காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது.
    • போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை

    விபத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பத்துக்கும், விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் பிழைத்தவர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருப்பது இன்ஸ்சூரன்ஸ் மூலம் உரிய இழப்பீட்டு தொகையை பெறுவதுதான். இதற்கு விபத்தை ஏற்படுத்துபவர்களின் வாகனங்களுக்கு முறையாக இன்சூரன்ஸ் கட்டி இருக்க வேண்டும். அந்த வாகன இன்சூரன்சை அடிப்படையாக வைத்துதான் கோர்ட்டு மூலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குரிய இழப்பீட்டு தொகையை பெற முடியும்.

    ஆனால் சமீபகாலமாக வாகன விபத்தில் சிக்கியவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் உண்மையாக இன்சூரன்ஸ் தொகை கட்டாமல், கட்டியதுபோல போலியான இன்சூரன்ஸ் சான்றிதழ்களை கொடுத்து தப்பிச்சென்று விடுகிறார்கள். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உரிய இழப்பீட்டு தொகை பெறமுடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

    மேலும் கார் வைத்திருப்பவர்கள், காருக்கான இன்சூரன்ஸ் தொகை செலுத்தாமல், மோட்டார் சைக்கிள் என்று ஏமாற்றி இன்சூரன்ஸ் சான்றிதழ் பெற்று ஏமாற்றுவதும், தற்போது அரங்கேறுவதாக சொல்லப்படுகிறது.

    விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் இதுபோன்ற மோசமான கலாசாரம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் பரவி வருவதை ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் சமீப காலத்தில் தமிழகத்தில் மட்டும் 137 போலி இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் போக்குவரத்து போலீசார் மூலம் கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார்களாம். சென்னை மட்டும் அல்லாமல் கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி போன்ற நகரங்களில் இது தொடர்பாக அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் போலீசில் புகார் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாங்காடு மற்றும் நசரத்பேட்டை போலீஸ் நிலையங்கள் உள்பட 12 போலீஸ் நிலையங்களில் உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசிலும் ஆன்லைன் மூலம் போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ்களை கோர்ட்டு வாயிலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டு, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் உண்மையானதுதானா? என்பதை போலீசார் முறையாக விசாரித்தால், ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்து, மோசடி பேர்வழிகளை சட்டப்படி தண்டிப்பதோடு, விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களும் மோசம் போகாமல் தடுக்க முடியும். கோர்ட்டு மூலம் கண்டுபிடிக்கப்படும்போது, காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது. அதற்குள் இதுபோன்ற மோசடி நபர்கள், தங்களது இருப்பிடத்தை மாற்றியோ அல்லது வேறு வழிகளிலோ தப்பிவிடுவார்கள். எனவே வாகன விபத்து இன்சூரன்ஸ் சான்றிதழ் விசயத்தில் போலீசார் உஷாராகவும், விழிப்போடும் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுபோன்ற போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் குறித்து, சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, தற்போது இதுபோல் போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் சமர்ப்பித்தால், இ சலான் ரசீது போடும்போது கண்டுபிடித்து விடுவோம். இதுபோன்ற புகார்கள் எங்களது கவனத்துக்கு வரவில்லை.சட்டம்-ஒழுங்கு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார்தான் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள். இருந்தாலும், இது தொடர்பாக விழிப்போடு இருக்கும்படி எங்கள் அதிகாரிகளிடம், அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • மதுரை ரெயில் நிலையம் எதிரே இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
    • ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு இடையேயான பிரச்சினையை மெத்தனமாக கடைபிடிக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிர்வாகத்தை கண்டிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள அரசு பொது இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு இன்று இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் மதுரை மண்டல கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புஷ்பராஜன், கண்ணன், மணிமாறன், உமாசங்கர் ஆகியோர் கோரிக்கையகளை வலியுறுத்தி பேசினார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பிரச்சினையில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதை கைவிட வேண்டும்.

    ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு இடை யேயான பிரச்சினையை மெத்தனமாக கடைபிடிக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிர்வாகத்தை கண்டிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் வெறிச்சோடியது.

    ×