search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் திறப்பு"

    • நாகையநல்லூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கான நீர் திறக்கப்பட்டது
    • கொல்லிமலையில் இருந்து வரப்பட்ட நீரினால் நாகையநல்லூர் ஏரி நிரம்பி வழிந்தது

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் நாகையநல்லூர்ஊராட்சியில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியான நாகையநல்லூர் ஏரி கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கொல்லிமலையில் இருந்து வரப்பட்ட நீரினால் நாகையநல்லூர் ஏரி நிரம்பி வழிந்தது. தற்பொழுது அந்த ஏரி குமுளி கரையிலிருந்து பாசனத்திற்காக நீரை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் பூஜை செய்து மலர் தூவி திறந்து வைத்தார். இதில் நாகையநல்லூர் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் ராதாசுப்ரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருஞானம், தொட்டியம் நகர கழக செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட பிரதிநிதி பெரியண்ணன், ஒன்றிய கவுன்சிலர் தீபா செல்லத்துரை, ஊராட்சி மன்றத் தலைவர் ராமதாஸ், கிளைக் கழகத்தைச் சேர்ந்த மகேந்திரன், நாகராஜ், விசுவநாதன், சக்திவேல், சங்க பிள்ளை பூபதி, மற்றும் தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், நாகையநல்லூர் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
    • கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடும்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில்தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான120 அடியை எட்டிய நிலையில், உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. பவானிசாகர்பகுதியில் பெய்யும் மழையும், கொள்ளிடம் ஆற்று பகுதியில் பெய்யும் மழை நீருடன் சேர்ந்த உபரி நீரும் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கீழணை யில் 8 அடி தண்ணீ ரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் நேற்று முன்தி னம் மதியம் விநாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடிதண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனா ல்கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் சென்றது. மேலும் கொள்ளிட ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் சிதம்பரம் அருகே தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம்,திட்டுக்காட்டூர்,கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் வருவாய்,வளர்ச்சித்துறை ஊரக அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மேலும் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொ றியாளர் காந்தருபன் தலைமையில் உதவி செய ற்பொறியாளர் அணை க்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர் மற்றும் உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அணையிலிருந்து 3000 கன அடி உபரி நீர் நிரம்பியதால் அணையிலிருந்து நீர் கடந்த 5-ந்தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது.
    • தவறான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து 3000 கன அடி உபரி நீர் நிரம்பியதால் அணையிலிருந்து நீர் கடந்த 5-ந்தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆற்றின் வழியாக செல்கிறது.

    மேற்படி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ- மாணவிகள் செல்பி எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற தவறான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர்களை இதுேபான்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். 

    • அவலாஞ்சி, அப்பர் பவானி, குந்தா நீர்பிடிப்பு பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • 4 மதகுகளின் வழியாக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    காரமடை

    நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, அப்பர் பவானி,குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    மொத்த கொள்ளளவான 100 அடியில் நேற்று காலை 81 அடி நீர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றிரவு 97 அடியை எட்டியது.

    இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரின் அளவான 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே 4 மதகுகளின் வழியாக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும்,மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பவானியாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு கரை புரண்டோடுகிறது.

    இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும்,ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும்,தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் 5 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ×