என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காமராஜர் பிறந்த நாள் விழா"
- விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.
தேனி:
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருநாள் நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் தேனி அரசு மருத்துவமனை மற்றும் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற ரத்த தானம் முகாமை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியத்தை பற்றி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்து, ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.
இந்த ரத்ததானம் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நடைபெற்ற ரத்ததான முகாமில் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 பேர் ரத்ததானம் செய்தனர்.
இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு சுவால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நகரச் செயலாளர் வி. ரவிச்சந்திரன், தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஹரிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் காந்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
மாவட்ட செயலாளர் எம். யமுனா, நெமிலி ஒன்றிய செயலாளர் ரவி, அரக்கோணம் ஒன்றிய தலைவர் தேவேந்திரன், நகரத் துணைத் தலைவர் சுபாஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் உத்தமன், நகர செயலாளர் கே.கஜேந்திரன், நகர பொருளாளர் முனுசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கஜேந்திரன், ஒன்றிய சிறப்பு அமைப்பாளர் புருஷோத்தமன் பலர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பேச்சாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்