search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private school girl கள்ளக்குறிச்சி"

    • வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டதுடன், அந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் கலவரம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் ஆய்வு செய்தார். கள்ளக்குறுச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும், போராட்டம் நடைபெறும் இடத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×