search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் சுய உதவி குழுக்கள்"

    • 1.5.2021 முதல் 30.10.2024 வரை 2,538 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • இதுவரை 1,415 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.07 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் குறைந்த பட்சம் 10-20 சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து பகுதி மற்றும் வார்டு அளவில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள குழுக்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய உதவிகளை பெறவும் இது வழிகாட்டுகிறது.

    1.5.2021 முதல் 30.10.2024 வரை 2,538 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 6 மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட, கூட்டமைப்புகளுக்கும் சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,415 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.07 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.

    வங்கியில் 317 திட்ட முன் வரைவுகள் சமர்பிக்கப்பட்டு இதுவரை 277.97 கோடி ரூபாய் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் 3,145 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, 1,929 பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1,11,979 குழந்தைகள் பயன் அடைகின்றனர்.

    சிறு, குறு உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 7,019 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.27.08 கோடி ரூபாய் மூலதன ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
    • சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும்.

    தாராபுரம்:

    தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவைக்கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல அளவில் வரும் ஜூலை 22 ந்தேதி தர்ணாவும், சென்னையில் வரும் ஆகஸ்ட் 16 ந்தேதி முதல் ஆகஸ்ட் 19 ந்தேதி வரையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

    சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இந்தத் திட்டத்தின் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தாமல் சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டத்தலைவா் ஞானசேகரன், மாநில துணைத்தலைவா்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×