என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டிகை"

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர். 

    அன்னதானப்பட்டி:

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. மேலும் வருகிற ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்க தயாராக உள்ளனர். இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர். 

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த தால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு முதல் மிகவும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். அதேபோல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, ஸ்டார்கள் தொங்கவிட்டு, அதனை மின்விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதனைக் குறிக்கும் விதமாக வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டுள்ளனர்.

    சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்ஷன், 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள புத்தகக் கடைகள், அழகு சாதன கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ரூ.50 , ரூ.60 முதல்  ரூ.2500 வரை கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் வடிவங்களுக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகின்றன, என்றார்.

    • சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.
    • தீபாவளிக்கு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயால் தீபாவளிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கான வருமானம் குறித்து தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டியராஜா தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு தெற்கு ரெயில்வே வணிகதுறை அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளிக்காக அக்டோபர் 18-ல் இருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரெயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரெயில்கள் தெற்கு ரெயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரெயில்வே எல்லைக்குள் இயக்கப்பட் டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

    மற்ற ரெயில்வே மண்டலங்கள் சார்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களில் இருந்து இருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

    திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.

    தாம்பரம் - திருநெல்வேலி ரூ.22.43 லட்சமும், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரூ.22.3 லட்சமும், தாம்பரம் - நாகர்கோவில் ரூ.18.2 லட்சமும், கொச்சுவேலி - தாம்பரம் ரூ. 17.71 லட்சமும் வழி நாகர்கோவில், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் ரூ.17.01 லட்சமும், தாம்பரம் - திருநெல்வேலி ரூ.11.56 லட்சமும், சென்னை - ராமேஸ்வரம் ரூ.11.29 லட்சமும், திருச்சி - தாம்பரம் ரூ.2.62 லட்சம் மற்றும் ஒரு மார்க்கத்தில் நாகர்கோவில் - பெங்களூரு ரூ.9 லட்சமும், திருநெல்வேலி - தானாப்பூர் ரூ.53.8 லட்சமும் (இரு சேவைகள்) வருமானமாக கிடைத்துள்ளது.

    இது தவிர மற்ற மண்டலங்கள் மூலம் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.1 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அனைத்து ரெயில்களையும் சேர்த்து மொத்த வருமானமாக ரெயில்வே துறைக்கு ரூ.2.96 கோடி வசூலாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து பயணிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை மாதங்களாக விளங்கும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் சிறப்பு ரெயில்கள் இயக்கினால் தெற்கு ரெயில்வேக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சிறப்பு ரெயில்கள் அனைத்தும் பல்வேறு ரெயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரெயில்களை கொண்டு இயக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    தற்போது இயங்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத காரணத்தால் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தும் வருகின்றனர்.

    ரெயில்வே துறை பண்டிகை கால சிறப்பு ரெயில்களை பண்டிகைகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்தால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ரெயில்வே துறை கடைசி நேரத்தில் சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கும் போது ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு ரெயில்களில் பயணம் செய்ய விரும்பமாட்டார்கள்.

    ஆகவே பண்டிகை காலங்களில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே ரெயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணாநகர், கபிலக்குறிச்சி, பிலிக்கல் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பொன்மலர் பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், அய்யம்பாளை யம், வடகரையாத்தூர், தண்ணீர் பந்தல், சோழசிராமணி, மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆலைகளில் கரும்புகளை இயந்திரம் மூலம் சாரு பிழிந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை என தயாரிக்கின்றனர்.

    தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்கள் உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் இதை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட் டங்கள், பல்வேறு மாநிலங்களுக்கும் அனு ப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,270-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதி களில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதி 10 ஆயிரத்து 840 பேரும், 25-ந்தேதி 11ஆயிரத்து 148 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதி 10 ஆயிரத்து 840 பேரும், 25-ந்தேதி 11ஆயிரத்து 148 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    • மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.
    • தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வரு கிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நியாயவிைலக் கடைகள் மூலம் வேட்டி-சேலை களை வழங்க அரசு உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து வேட்டி-சேலைகள் கொள்முதல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடிந்ததும் அவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    சென்னையில் இருந்து மண்டலம் வாரியாக அனுப்ப ப்பட்டு, பின்னர் மாவட்ட ங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதன்படி குமரி மாவட்டத்தில் விநியோ கிக்கப்பட வேண்டிய வேட்டி-சேலைகள் லாரிகள் மூலம் வந்தன. மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.

    தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் வேட்டி-சேலைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை தாலுகா அலுவலகத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட வேட்டி-சேலைகள்,வட்டா ட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

    அங்கிருந்து அவை விரைவில் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
    • இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சேலம்:

    கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்ப டும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்க ளால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்கா லத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் நடை பெற்றது. ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியா ழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நேற்றுமுன்தினம் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை, சிலுவை பாதை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தேவா லயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.

    சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் பேரா லயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தி லும் ஈஸ்டரை முன்னிட்டு பண்டிகை சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம், கோட்டை லெக்லர் ஆலயம், சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப் காட் திருச்சபையிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

    • மதுரையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடந்தன.

    மதுரை

    கிறிஸ்தவ பண்டிகை களில் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர். இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று முதல் தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்தவர்கள் பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை தொடங்கினர். இந்த நிகழ்வு ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவுடன் நிறைவுக்கு வந்தது.

    இதையொட்டி நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் திருப்பலி மற்றும் ஆராத னைகள் நடத்தப்பட்டன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞானஒளிவு புரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல்நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தத்தை லூர்து, உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றினர்.

    செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லீஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவால யங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது. சி.எஸ்.ஐ மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராத னைகள் நடந்தன.

    இவற்றில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பம்- குடும்பமாக கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் 'குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பங்குத்தந்தை அறிவித்ததும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்றது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாக அமைந்தது.

    • பள்ளிவாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    கடலூர்:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அஞ்சுமனே நூரே முஹம்மதியா ஜாமியா பள்ளிவாசலில் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி பள்ளி வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் பள்ளிவாசல் முக்தவல்லி ரபீக், செயலாளர் நஜீர் அகமது, ராமலிங்கம், முருகன், அஷ்ரப் அலி, செந்தில், சிலம்பு, அப்துல் ரஷீத், சதிஷ், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும்.
    • நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.

    மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.

    இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றி சில விவரங்கள்...

    கிருஷ்ணரின் பிறப்பு

    தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன் தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

    இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சன் ஈவு-இரக்கமின்றி கொன்று வந்தான். இவ்வாறாக 7 குழந்தைகளையும் கம்சனே கொன்றான். தேவகி 8வது முறையாக கர்பமுற்றாள். அதே சமயம் வாசுதேவரின் நண்பரும் ராஜாவுமான நந்தாவின் மனைவி யசோதாவும் கர்பமுற்றாள்.

    இந்நிலையில் ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் பிறந்தார் (அவதரித்தார்). அதே சமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

    அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துவிடு. அங்கு அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு என்று வாசுதேவருக்கு ஆணையிட்டார்.

    வாசுதேவரும் கிருஷ்ணரை கூடையில் சுமந்தபடி கொட்டும் மழையில் கோகுலத்தை நோக்கிச் சென்றார். அங்கு கிருஷ்ணரை வைத்துவிட்டு, பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தார் வாசுதேவர்.

    அந்த பெண் குழந்தை வந்ததும், 8வது குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்கு எட்டியது. உடனடியாக விரைந்து வந்த கம்சன், அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றபோது, அது அவனது பிடியில் இருந்து விலகிச் சென்று காளித் தோற்றம் கொண்டு பேசியது, கம்சனே உன்னைக் வதம் செய்வதற்கான 8வது குழந்தை கிருஷ்ணன் பிறந்துவிட்டான். அவன் வேறொரு இடத்தில் வளர்ந்து உன்னைக் கொல்ல வருவான் என்று கூறி மறைந்தது.

    இதையடுத்து தேவகியையும், வாசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான்.

    அதே நேரத்தில், நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.

    அந்த தினத்தை கோகுலமே கொண்டாடியது. தற்போது இந்தியாவிலும், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

    கிருஷ்ணருக்குப் பிடித்த இனிப்புகள்: அவல் லட்டு, சேமியா பாயசம்.

    • ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • 3-ந் தேதி சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே மேட்டூர் பரி.திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் செங்கோட்டை சேகர தலைவர் கலந்து கொண்டு செய்தி அளித்தார். பின்னர் ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 3-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது. இதில் அருள் சோபா குழுவினர் கலந்து கொண்டு பண்டிகையை நடத்தினர். இதையடுத்து நேற்று காலையில் நடை பெற்ற பண்டிகை ஆராதனையில் இந்திய மிஷனெரி சங்க தேசிய பணித்தள ஒருங்கிணைப்பாளர் குரு இம்மானுவேல் பால் செய்தி அளித்தார். தொடர்ந்து ஐக்கிய விருந்து நடை பெற்றது. பண்டிகை ஆரா தனையில் சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, குரு வானவர்கள் சில்வா ன்ஸ், ராபர்ட் ,ஜெயமணி மேட்டூர் சேகர குரு ஜோயல் ஷாம் மெர்வின்,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    சென்னை:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.

    வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது.

    ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் மாற்ற வேண்டும்.

    அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரவ்வாய் மொழி பள்ளியாடி குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்த வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுன், பள்ளியாடி குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படுகிறது.
    • ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

    ஜூலை 1 மற்றும் ஜூலை 2 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முஸ்லிம் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடித் திரும்புவதில் சிரமம் இருக்காது.

    மேலும் ஒருசில கல்வி நிறுவனங்களில் ஜூன் 30 அன்று தேர்வுகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×