search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 246186"

    • குமரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • வெளியூருக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்

    நாகர்கோவில்:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலம் கணியாமூரில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையடுத்து அங்கு கலவரம் வெடி த்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட தலைநகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்ரண்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று இரவு ஸ்டே பஸ்கள் அனைத்தும் டெப்போக்களுக்கு கொண்டுவர டிரைவர் கண்டக்டருக்கு அறிவுறுத்த ப்பட்டது. இதையடுத்து அனைத்து ஸ்டே பஸ்களும் டொப்போகளுக்கு கொண்டுவரப்பட்டது.

    பஸ் போக்குவரத்து இன்று காலையில் தாமதமாக தொடங்கியது.குமரி மாவட்டத்தில் உள்ள 11 டெப்போக்களில் இருந்தும் தினமும் அதிகாலை 4 மணிக்கு பஸ்கள் பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கிராமப்புறங்களுக்கும் வெளியூர்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இன்று இரண்டு மணி நேரம் தாமதமாக 6 மணிக்கு பிறகு பஸ்கள் டெப்போக்களிலிருந்து பஸ் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டது.

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4 மணி முதலே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். இன்று தாமதமாகவே பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதனால் அதிகாலையிலேயே வெளியூருக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்.மேலும் நெல்லை, மதுரைபோன்ற நகரங்களுக்கு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே பஸ்கள் புறப்பட்டு சென்றது. தஞ்சாவூர், கோவை, குமிழி போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தி லிருந்து கன்னியாகுமரி களியக்காவிளை தக்கலை குளச்சல் போன்ற ஊர்க ளுக்கு செல்லும் பஸ்களும் இன்று தாமதமாகவே இயக்கப்பட்டது.

    பஸ்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்களும் சற்று பாதிப்புக்கு ஆளானார்கள்.

    காலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் ெரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை, நாங்குநேரி ெரயில் நிலையங்களிலும் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் மக்கள் நல அமைப்பு செயலாளர் திடீர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்ட காரர்கள் கற்களை வீசினார்கள். இந்த கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர். என்றாலும் போராட்டம் ஓயவில்லை. நேரம் செல்ல செல்ல வன்முறை அதிகரித்தது. பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது. இதில் பள்ளி பஸ்கள், டிராக்டர்கள் எரிந்து நாசமானது.

    இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுபடுத்தப்பட்டது. இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை மக்கள் அதிகார அமைப்பு செயலாளர் ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×