search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டர்நேஷனல் பள்ளி"

    • முதல்வர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டிவாழ்த்துகளை தெரிவித்தனர்.
    • ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அளவிலான குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம் அளவிலான குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் 2022-23ஆண்டிற்கானது காரமடை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியல் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் நேஷனல் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    தடகளப்போட்டியில் 5 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். பூப்பந்து போட்டியில் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்விஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டிவாழ்த்துகளை தெரிவித்தனர். 

    • தொடக்க விழாவில் கேரளா பிரில்லியன்ட் அகடமி, நெல்லை பயிற்சி மையத்திலிருந்து லமிஸ் நசீம் தாவரவியல் வல்லுனர், சஹானாஸ் வேதியல் வல்லுனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி நீட் தேர்விற்கு எவ்வாறு தயாராவது, பெற்றோர்களின் பங்களிப்பு பற்றி விளக்கினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 9, 10 மற்றும் 11 -ம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

    இதன் தொடக்க விழாவில் கேரளா பிரில்லியன்ட் அகடமி, நெல்லை பயிற்சி மையத்திலிருந்து லமிஸ் நசீம் தாவரவியல் வல்லுனர், சஹானாஸ் வேதியல் வல்லுனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி நீட் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், தேர்விற்கு எவ்வாறு தயாராவது, பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கினார். பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மற்றும் அகாடமி வல்லுனர்கள் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள்,மாணவர்களிடம் ஏற்படுத்தினர்.

    ×