search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலர் களங்கள்"

    • உலர் களமும், இருப்பு வைக்க குடோன்களும், பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன.
    • வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்களையும், இருப்பு வைக்க குடோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் உலர்களங்கள் சிதிலடைந்தும், குடோன் பராமரிப்பு இல்லாமலும் உள்ளன.இது குறித்து ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் நாகூர் திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், குடிமங்கலம் ஒன்றியத்தில், பி.ஏ.பி., பாசனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அறுவடைக்கு பிறகு, விளைபொருட்களை காய வைக்க, உலர் களமும், இருப்பு வைக்க குடோன்களும், பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. தொடர் பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான உலர்களங்கள் சிதிலமடைந்துள்ளன.

    புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி கிராமத்திலுள்ள, இரண்டு உலர்களங்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகின்றன. மக்காச்சோளம், கொண்டைக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் இருப்பு வைக்கும் குடோனும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.எனவே, கிராமங்களிலுள்ள, உலர்களம், குடோனை புதுப்பிக்கவும், கூடுதல் களங்கள் கட்டவும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×