என் மலர்
நீங்கள் தேடியது "குரங்கு"
- கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தே மனித இனம் உருவானது என்பார்கள் உயிரிலாளர்கள். மொழி தவிர கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான். புத்திசாலி விலங்கு என குரங்கு கூறப்படுவதற்கு வங்காளதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்குள்ள மெஹர்பூரில் குரங்குகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது.
இந்தநிலையில் குரங்கு ஒன்றுக்கு கையில் அடிபட்டது. அப்போது அந்த குரங்கு அங்குள்ள மருந்துக்கடைக்கு தானாக சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர், குரங்குக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்தார். அங்கு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் குரங்குக்கு உதவி செய்ய முற்பட்டனர். அப்போது அதன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவி முதலுதவி சிகிச்சை அளித்தனர். குரங்கும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
- குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
- குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் காட்டில் இருந்து வழிதவறிய குரங்கு ஓன்று அந்தப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து பல்லடம் பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் அவரப்பாளையம் வந்து குரங்கை தேடி கண்டு பிடித்தார். அந்த குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை குரங்குகள் கடித்தும் பறித்தும் சேதப்படுத்துகின்றன.
- குரங்குகளிடம் இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை வளர்க்கும் விவசாயிகள் சிலர் பருவமழையை நம்பி மானாவாரியாகவும், மற்ற விவசாயிகள் கிணற்று பாசனத்திலும் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இங்கு மலைபகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளதால் குரங்குகள் ஏராளமாக இருக்கிறது. அவை உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகிறது.
பிரான்மலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை கடித்தும் பறித்தும் சேதப்படுத்தி, அதில் உள்ள தண்ணீரை குடித்தும் விடுகிறது.
இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், அவைகளிடம்இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் முதலில் ஒரு சில மரங்களில் முள்வேலி அமைத்து பார்த்தனர். அதை குரங்குகள் லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் தற்போது வித்தியாசமாக புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தை காணும் குரங்குகள் மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் நிஜபாம்புதான் இருக்கிறது என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஒடுவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரனன் கூறியதாவது:-
இந்த பகுதியில் குரங்குகள் அதிகமான அளவில் தொந்தரவு செய்து தேங்காய் விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குரங்குகள் தென்னை மரத்தின் மீது ஏறி குறும்பைகள், இளநீர் காய்கள் மற்றும் பூக்களை சேதப்படுத்துவதால் தென்னை மரத்தில் அதிக விளைச்சல் காண முடியவில்லை.
குரங்குகளுக்கு பாம்பு என்றால் பயம் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அதை மனதில் வைத்து எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்துள்ளேன். தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்ததால் இந்த படத்தை பார்த்த குரங்குகள் நிஜ பாம்பு என்று பயந்து மரத்தில் ஏறுவதில்லை. இதனால் எனக்கு தென்னை விவசாயத்தில் சரியான மகசூல் கிடைத்து வருகிறது.
இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்தால் பாம்பு ஓவியத்தை தென்னை மரத்தில் விவசாயிகள் அனைவரும் வரைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அவரது உடைமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா்.
அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தென் கிழக்கு ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காணப்படும் 8 பறக்கும் அணில் என்ற சுகர் கில்டர் குட்டிகள், தென் அமெரிக்கா, பிரேசில் நாடு வனப்பகுதியில் இருக்கும் மர்மோசெட் என்ற வகை 3 சிறிய குரங்கு குட்டிகள், தென் அமெரிக்கா வனப்பகுதியில் வசிக்கும் தேகு லிசார்ட் என்ற 3 ராட்சத பல்லி குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை விலங்கு குட்டிகள் என்பதாலும், அவற்றை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் என்பதாலும் தாய்லாந்தில் இருந்து எடுத்து வந்திருப்பதாக கூறினார்.
ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க்கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்கா, அமேசான் வனப்பகுதியில் வசிக்க கூடியது என தெரிவித்தனர்.
இதையடுத்து வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
- நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு திரளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதனை தடுக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். குரங்குகளை பிடிக்க அப்பகுதியினர் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்று வேளிமலை வனசரகத் திற்குட்பட்ட வடக்கு பீட் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க முடிவு செய்து கூண்டு வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதில் நேற்று 32 குரங்குகள் சிக்கியுள்ளன. அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்து வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
- புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
- குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
அதன் 2 கைகளிலும் வெட்டு காயங்கள் காணப்படுகிறது. இந்த குரங்கை அப்பகுதி மக்கள் அனுதாபத்துடன் பார்த்து உணவு வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குரங்குக்கு பழத்தில் மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால் குரங்கு மருந்து இருப்பதை அறிந்து பழத்தை தூக்கி எறிந்து விட்டது. குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
- வீடுகளுக்குள் இருந்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி
- 10 குரங்குகள் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
மேக்காமண்டபம் கோதநல்லூர் அருகே மாராங்கோணம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
இந்த குடியிருப்புகளுக்குள் அடிக்கடி குரங்குகள் புகுந்து வந்தது. மேலும் வீடுகளுக்குள் இருந்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதையடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளிமலை வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அந்த குரங்கு களை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். குரங்கு களை பிடிக்க அந்த பகுதி யில் கூண்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
நேற்று காலை அந்த பகுதி யில் கூண்டுகள் வைக்கப் பட்டது. அப்போது அங்கு வந்த 10 குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. கூண்டுக் குள் குரங்குகள் சிக்கியதை யடுத்து அந்த குரங்குகளை மீட்க வனத்துறை அதிகா ரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர். கூண்டுக்குள் சிக்கிய 10 குரங்குகளையும் வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பின்னர் அந்த குரங்கு களை வேளிமலை சரகத் துக்குட்பட்ட பாதுகாப்பான வனப் பகுதிக்கு கொண்டு விட்டனர். ஒரே இடத்தில் 10 குரங்குகள் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர்
- குடிக்காடு கிராமத்தில் பிரத்யேக கூண்டு தயார் செய்து வைத்திருந்தனர்.
- 2 நாட்களில் அந்த கூண்டில் 20 குரங்குகள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்பட்டது.
வீட்டின் மாடிகளில் காய வைக்கப்பட்ட துணிகள், பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடியது.
வீட்டுக்குள் புகுந்து மளிகை பொருட்கள், தின்பண்டங்களை தூக்கி ஓடி தெருவில் வீசி நாசப்படுத்தியது.
மேலும் வீட்டின் மேற்கூறையில் ஏறி ஓட்டை பிரித்து சேதப்படுத்தியது.
கடந்த 6 மதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி வனத்துறையினர் 2 நாட்களுக்கு முன்பு குரங்க்களை பிடிப்பதற்காக வேங்கைராயன் குடிக்காடு கிராமத்தில் பிரத்யேக கூண்டு தயார் செய்து வைத்திருந்தனர்.
அந்தக் கூண்டில் பட்டாணி, பொறி உள்ளிட்ட குரங்குகளுக்கு பிடித்த பண்டங்களை வைத்தனர்.
மேலும் குரங்குகள் பிடிப்பவர்களையும் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களில் அந்த கூண்டில் 20 குரங்குகள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டன.
இந்த குரங்குகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து அடுத்த கட்டமாகவும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
- அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஆ.சோழங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றிதிரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவு மற்றும் தின்பண்டங்களை தூக்கி சென்று வருகிறது. மேலும் வீடுகளின் மேற்கூரைகளை பிரித்து நாசமாக்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரடி உடை அணிந்து காவல் பணியில் ஈடுபட்ட பிறகு குரங்குகள் போன்ற விலங்குகளின் தொல்லை குறைந்துள்ளது என்றார்.
- விவசாயிகள் அணியும் கரடி உடைக்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆகிறதாம்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் ஏராளமான குரங்குகள் புகுந்து கரும்பு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் கரடி ஆடைகளை அணிந்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குரங்குகளை பயமுறுத்துவதற்காக விவசாயிகள் கரடி உடை அணிந்து வயல்களுக்கு நடுவே அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
விவசாயிகள் அணியும் கரடி உடைக்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆகிறதாம். மேலும் வயல்களில் கரடி பொம்மை அணிந்து நிற்பதற்காகவே சில வாலிபர்களை பணிக்கு அமர்த்தி உள்ளனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.250 கொடுக்க வேண்டியிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சஞ்சீவ் மிஸ்ரா என்ற விவசாயி கூறுகையில், கரடி உடை அணிந்து காவல் பணியில் ஈடுபட்ட பிறகு குரங்குகள் போன்ற விலங்குகளின் தொல்லை குறைந்துள்ளது என்றார்.
- அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.
- நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குடிகாடு பகுதியில் ஒரு வீட்டில் நாய்க்குட்டி வளர்த்து வருகின்றனர். அந்த நாய்க்குட்டியை, பார்ப்பதற்கு ஒரு குரங்கு தினமும் குடிகாடு கிராமத்திற்கு வருகிறது.
பின்னர் சாலையில் சுற்றித்திரியும் அந்த நாய்க்குட்டியை குரங்கு லாவமாக தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்கிறது. பின்னர் அந்த நாய்க்குட்டியுடன் குரங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.
இது மட்டுமின்றி குரங்கு தனது குட்டி குரங்குகளுக்கு எப்படி பேன் பார்க்குமோ அதேபோல் அந்த குட்டி நாய்க்கும் பேன் பார்ப்பது போல் பாவனை செய்கிறது. மேலும் உயரமான கட்டிடத்தில் நாய்க்குட்டி விளையாடுவது மட்டுமின்றி குரங்குடன் எந்தவித சண்டையும் போடாமல் ஆனந்தமாக இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆனந்தமாகவும், வியப்புடனும் பார்த்து வருகின்றனர்.
தினமும் அந்த வீட்டு பகுதிக்கு வரும் குரங்கு, நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு தனக்கு பிடித்தமான இடத்தில் வைத்துக்கொண்டு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.
பெரும்பாலும் குரங்குகள் மற்ற பிராணிகளுடன் விளையாடுவதை விரும்பாமல் மரங்களை விட்டு மரங்கள் தாவியும் தனக்கான உலகத்தில் யாரையும் அண்டவிடாமல் பாதுகாப்பாக இருந்து வரும் நிலையில், குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தினமும் தூக்கி சென்று விளையாடி விட்டு மீண்டும் அதே பகுதியில் இறக்கி விட்டு செல்வது அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். தங்களது செல்போன்களிலும் படம் பிடித்து கொள்கின்றனர்.
- சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர்.
- மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட் டம் குழித்துறை நகராட்சி கட்டிடத்தில் ஆதார், இ-சேவை மையம், பிறப்பு-இறப்பு பதிவு மையம், நகராட்சி அலுவலகம் செயல்படுகின்றன. இத னால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் அலுவலகத்துக்குள் சென்றார். மாலையில் மோட்டார் சைக்கிளை எடுக்க வரும்போது, மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் குரங்கு நிற்பதை பார்த்தார். பின்னர் அவர் குரங்கை துரத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு, மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு அருகே நின்ற மரத்தின் கிளை மீது ஏறி மேலே அமர்ந்து கொண்டது.
உடனே சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர். மேலும் கட்டைகளை எடுத்து வீசியும் பயமுறுத்தினர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குரங்கு சாவியை மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் கொண்டு வைப்பதும், எடுப்பதும் மட்டுமின்றி 2 கைகளில் மாறி, மாறி பிடித்து போக்கு காட்டியது.
ஒரு கட்டத்தில் துரத்தி பார்த்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் சாவியை வாங்க முடியாது என முடிவு செய்து சோர்ந்து போய் அமர்ந்திந்தனர். இவர்கள் சோர்ந்து போய்விட்டதை தெரிந்து கொண்ட குரங்கு சாவியை ஊழியர் மீது வீசி எறிந்தது. பின்னர் அங்கிருந்து மரத்துக்கு மரம் தாவி குரங்கு வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.
அருணாச்சலம் சினிமாவில் நடிகர் ரஜினியின் ருத்ராட்சம் மாலையை குரங்கு பறித்து செல்வது போல் குழித்துறை நகராட்சி ஊழியரின் மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.