search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஷா யோகா மையம்"

    • கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
    • பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

    தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் இன்று நடைபெற உள்ளது.

    செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெறும் இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

    குறிப்பாக, காய்கறி சாகுபடியில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது, பல பயிர் சாகுபடி மூலம் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள், பூச்சி கொல்லிகளின் செலவில்லாத விவசாய வழிமுறைகள், வரப்பு பயிர்களின் பயன்கள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் புதிய உத்திகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

    இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

    • நாகை கீழ்வேளூரில் இருந்து கட்டிடக்கலை கற்றல் ஆய்விற்காக வருகை தந்தனர்.
    • மாணவர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    கோவை

    நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று (பிப் 25) கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர்.

    ஈஷா யோகா மையத்திற்கு இன்று காலை கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் இருந்து 28 கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் 2 கல்லூரி விரிவுரையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஈஷா மைய வளாகத்தில் உள்ள சூர்ய குண்டம், நந்தி, லிங்கபைரவி, சந்திரகுண்டம், தியானலிங்க மற்றும் ஆதியோகி திருவுருச் சிலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு அவ்விடங்களின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    ஆன்மீக நோக்கத்தில் அறிவியல் ரீதியாக நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுடன் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தருகின்றனர். ஈஷாவின் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் அதன் நுணுக்கங்களை வருகை தரும் பலரும் வியந்து ரசித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.
    • மண் காப்போம் இயக்கம் கூறுவதை போல விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3-6% கரிமப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

    கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று (ஜனவரி 29) வருகை தந்தார்.

    உளவியலாளரான நதாலி அவர்கள் 'மண் காப்போம்' இயக்கத்திற்காக சத்குரு அவர்கள் தனிநபராக மேற்கொண்ட 30,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் தான் தனது இந்த பயணத்திற்கான உத்வேகம்" என்று கூறினார்.

    மேலும், இது தொடர்பாக அவர் பேசுகையில், "நான் சத்குருவை சுவிட்சர்லாந்திலும், பாரிஸிலும் அவர் மண் காப்போம் பயணத்தில் இருந்த போது பார்த்தேன். அவரின் செயல்களைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். அத்துடன் நமது மண்ணின் பலவீனமான நிலையை நான் உணர்ந்தேன். அந்த நிமிடம் வரை நான் அதை அறிந்திருக்கவில்லை. உலகளவில், 52% விவசாய நிலங்கள் நிலம் மற்றும் மண் சிதைவினால் பாதிக்கப்பட்டுள்ளன. மண் அழிவு உலகெங்கிலும் உள்ள 3.2 பில்லியன் மக்களை எதிர்மறையாக பாதிக்கிறது என யுஎன்சிசிடி அமைப்பும், பூமியின் மேல் மண்ணில் 90 சதவீதம் 2050 ஆண்டிற்குள் ஆபத்தில் இருக்கும் என எஃப்ஏஓ அமைப்பும் எச்சரித்துள்ளது.

    மண் காப்போம் இயக்கம் கூறுவதை போல விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3- 6% கரிமப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது மண் வளம் பெற்று விவசாயம் தொடர்ந்து நல்ல முறையில் நடைபெறும். உலகளாவிய உணவு நெருக்கடியையும் தவிர்க்க முடியும்.

    எனவே, நமது அரசியல் தலைவர்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான சட்டங்கள் மற்றும் புத்துயிர் அளிக்கும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்" என கூறினார்.

    உலக அளவில் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்ற மண் காப்போம் இயக்கம், ஐ.நா. வின் 9 அமைப்புகள் மற்றும் உலக உணவுத் திட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது. மண் அழிவை தடுக்கும் தீர்வுகளை முன்வைக்கும் இத்திட்டம், மண் வளத்திற்கான உறுதியான கொள்கைகளை நிறுவுவதில் அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.

    தலாய் லாமா, ஜேன் குட் ஆல், ட்ரெவர் நோவா, ஜோ ரோஜென், மார்க் வால்ல்பெர்க் மற்றும் டிடியர் ட்ரோக்பா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மண் காப்போம் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

    இதுவரை மண் காப்போம் இயக்கம் 3.91 பில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆதியோகி சிலை பழங்குடியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
    • கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டு விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையிலிருந்து சென்னைக்கு விமான பயணம் செய்தனர். இவர்கள் இண்டிகோ விமானத்தில் காலை 11:30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 12 :45க்கு சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை விமானப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இதுவரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் தான் விமானத்தை பார்த்திருக்கோம். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது" என்றார் வெள்ளாச்சியம்மா. மடக்காடு கிராமத்தை சேர்ந்த இவர், ஈஷா யோக மையத்திற்கு அருகே உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் இளநீர் விற்பனை செய்கிறார்.



    2017ல் திறக்கப்பட்ட ஆதியோகி சிலை அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் வருகை அதிகரித்ததால் உணவு கடைகளுக்கான தேவை அதிகரித்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடி  மக்கள், ஈஷா அவுட்ரீச் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பிரம்மச்சாரிகளின் உதவியோடு கடைகள் நடத்த தொடங்கினர். இந்த கடைகள் மூலமாக அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள். இந்த கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டே இந்த விமான பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

    "என் மனைவிக்கு எப்போதும் விமானத்தில பறக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதனால திருப்பதிக்குப் போக நாங்க தயார் பண்ணிட்டு இருந்தோம், அப்பதான் ஈஷா அவுட்ரீச்ச்லிருந்து ஒரு சுவாமி சென்னைக்கு போறத பத்தி சொன்னாங்க. நான் தினமும் அதப்பத்தி கேட்டுட்டே இருப்பேன். என் மனைவி ஆசை நிறைவேறிடிச்சுனு, எனக்கு சந்தோஷமா இருக்கு" என்கிறார் மடக்காடு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி.

    முதல் முறையாக விமான பயணம் செய்யும் இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்ததோடு, விமானத்தில் ஏறியதும் விமானி இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். மேலும் பயணத்தின் பொழுது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.

    "இது வெறும் ஆரம்பம் தான்.  ஆதியோகிக்கு வருகின்ற மக்கள் கூட்டம் அதிகமாகும். அதனால் அடுத்த வருஷம் இன்னும் 100 பேர் விமானத்தில போவோம். இது எங்க எல்லாருடைய ஆசை" என்கிறார் முள்ளாங்காட்டை சேர்ந்த சூரியகுமார்.

    ×