என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் கைது"

    • மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • சாபம் விட்டு விடுவேன் என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் அலகோடு உதயகிரி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி. அந்த பகுதியில் உள்ள மதரசா ஒன்றில் ஆசிரியராக இருந்துவந்த அவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 2020-2021 ஆண்டுகளில் மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தபடி இருந்திருக்கிறார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால், "சாபம் விட்டு விடுவேன்" என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.

    இதுகுறித்து பழையங்காடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முகமது ரபி மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கேரளா தளிப்பரம்பா போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ், குற்றம் சாட்டப்பட்ட முகமது ரபிக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.9 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முகமதுரபியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    போக்சோ வழக்கில் 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முகமது ரபி, இதற்கு முன்பு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 26 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்து வந்த நிலையில் தான், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எர்ணாகுளம் பகுதியில் இருந்து கலை நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவி ஒருவருக்கு அவரை அழைத்து சென்ற ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • நாகர்கோவிலில் பதுங்கி இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கலோல்சவம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்து சென்றனர்.

    இதில் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கலை நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவி ஒருவருக்கு அவரை அழைத்து சென்ற ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தை மறைத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதே நேரம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கிரண் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை எர்ணாகுளம் போலீசார் தேடி வந்தனர்.

    இதில் ஆசிரியர் கிரண், நாகர்கோவிலில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் நாகர்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உதவியுடன் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த ஆசிரியர் கிரண் நேற்று கைது செய்யப்பட்டார்.

    அவரை போலீசார் எர்ணாகுளம் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கிரண் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிரியர் ஜோசப் குட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
    • போலீசார் ஆசிரியர் ஜோசப்குட்டி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோசப் குட்டி.

    பள்ளியில் இவரது வகுப்பில் படிக்கும் பிளஸ்-2 மாணவி ஒருவர், வீட்டில் மிகவும் சோர்வாக இருந்தார்.

    இதுபற்றி பெற்றோர் அவரிடம் கேட்டபோது பள்ளியில் ஆசிரியர் ஜோசப் குட்டி தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், இதனால் வகுப்புக்கு செல்லவே பிடிக்கவில்லை எனவும் கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அவர்கள் இதுபற்றி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து மாணவியிடம் விசாரித்தனர். இதில் ஆசிரியர் ஜோசப் குட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் ஆசிரியர் ஜோசப்குட்டி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுபற்றிய தகவல் வெளியானதும், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 3 பேர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதில் ஆசிரியர் ஜோசப் குட்டி தங்களுக்கும் இதுபோல செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார்.
    • அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பாலியல் சீண்டல், தொல்லைகளில் இருந்து பெண்களை, குழந்தைகளை, மாணவிகளை பாதுகாப்பது என்பது தற்போது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் வியாபித்துள்ள இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு எந்திரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தினமும் ஆங்காங்கே அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறத் தான் செய்கிறது. அப்படி ஒரு கொடுமை நாகையிலும் நடந்துள்ளது.

    நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறு இயல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த உரையாடல் விபரம் வருமாறு:-

    ஆசிரியர்: ஹலோ, நான் பேசுறது கேட்குதா?

    ஆசிரியர்: நீ என் வீட்டுக்கு வா...

    மாணவி: இல்ல சார், என்னால வர முடியாது. எனக்கு மென்சஸ் சார், வலி அதிகமா இருக்கு

    ஆசிரியர்: பரவாயில்ல வா, நான் பாத்துக்கிறேன், இன்னிக்கு எத்தனாவது நாள்

    ஆசிரியர்: வாடா தங்கம், என்ன புரிஞ்சிக்க மாட்டியா. ஒண்ணும் பிரச்சினையில்ல வா...

    மாணவி: இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சு விட்ருங்க சார், இனி என்மேல எந்த புகாரும் வராம பாத்துக்கிறேன் சார்.

    ஆசிரியர்: பிரச்சினை பெரிசாயிக்கிட்டே இருக்கு, அதனாலதான் உன்ன கூப்பிட்டு வார்ன் பண்ண வீட்டுக்கு கூப்பிடுறேன், வா

    மாணவி: (அழுது கொண்டே) இல்ல சார், எனக்கு பயமா இருக்கு

    ஆசிரியர்: என்னடா பயம், அழாத உடனே கிளம்பி வா...

    மாணவி: இந்த பிரச்சினையை இதோட விட்ருங்க சார்

    இவ்வாறு உரையாடல் நீளுகிறது.

    இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளை அருகில் அழைத்து தொடுவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அந்த வகையில்தான் எல்லை மீறிய ஆசிரியர் சதீஷ், மாணவியை வலுக்கட்டாயமாகவும், மிரட்டும் தொணியிலும் தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லியும், அதனை புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ஆசிரியர் சதீஷ் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்த புகார் கலெக்டர் அருண்தம்புராஜூக்கு சென்ற நிலையில் சமூக நலத்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர். அதனை கலெக்டரிடமும் சமர்ப்பித்தனர்.

    இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நாகை டவுன் போலீசார் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த ஆசிரியர் சதீஷ் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதற்குள் தனது காம லீலைகளை மாணவிகளிடம் வக்கிரத்துடன் காட்டி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

    • குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்தியது.

    அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பைசல் மேச்சேரி மீது மாணவிகள் 5 பேர் புகார் கூறினர். அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பைசல் மேச்சேரியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • ஆசிரியர் பாலசுப்பிரமணியனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்களிலும் பேசி வருவதாக அடிக்கடி புகார் எழுந்து வந்தது. சமீபகாலமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் அவதூறாக பேசியதாக அந்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளனர்.

    ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததாக கூறி நேற்று முன்தினம் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    உடனடியாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும். பணியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் அருள்செல்வனை பணியிடைநீக்கம் செய்தது.
    • ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில்  கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்பனூரை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் அருள்செல்வன் (வயது 51). இவர் தற்போது ஆலங்குளம்-தென்காசி சாலையில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருள்செல்வன் பூலாங்குளம் அருகே மாதாபட்டினத்தில் அமைந்திருக்கும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அருள்செல்வன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் அருள்செல்வனை பணியிடைநீக்கம் செய்தது.

    இதைத்தொடர்ந்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நேற்று அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவிகள் தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.
    • ஆசிரியர் செபா சகேயுன் மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக போலீசில் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் அருகே விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவிகள் தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.

    பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாணவிகளை உடன் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் திலகவதி, செபா சகேயுன் மற்றும் பிலிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி ஆகியோர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மாணவிகள் பலியான சம்பவம் எதிரொலியாக ஆசிரியர் செபா சகேயுன் மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாயனூர் போலீசில் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    • கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    இதில் ஆசிரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதனையறிந்த ஆசிரியர் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
    • போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியரை கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக தெரிகிறது.

    இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்வா மாவட்டம் பெனி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் உள்ள போர்டில் மதவாசகம் எழுதியுள்ளார். இது குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதனால் காயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியரை கைது செய்தனர்.

    • விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் நீட் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் விவேக் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் அங்கு படித்து வரும் 17 வயது மாணவியை படிப்புக்கு உதவுகிறேன் என கூறி காபி சாப்பிட அழைத்தார். இதை நம்பி அந்த மாணவியும் அவருடன் ஓட்டலுக்கு சென்றார். அப்போது விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். விவேக்குடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான சைலேந்திரா என்பவர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினார்.

    தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் விவேக்கை பிடித்து அவர் அணிந்து இருந்த ஆடையை களைந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக ரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார்.
    • கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேல பொன் பேற்றியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் செண்டரையும் நடத்தி வந்தார். இந்நிலையில் அப்பள்ளி யில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூஷன் செண்டருக்குப் போன மாணவியிடம் ஆசிரி யர் கணேஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணேஷ்குமார் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, நெடுங்காடு போலீசார் கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இந்த நிலையில் கும்ப கோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஆசிரியர் கணேஷ்குமார் தலைமறை வாக இருந்தது போலீ சாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நெடுங்காடு சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் விரைந்து சென்று ஆசிரியர் கணேஷ் குமாரை கைது செய்தனர்.

    ×