search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் மோதி வாலிபர் சாவு"

    • அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக பூவரசன் மீது மோதியது.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

     கிருஷ்ணகிரி அருகேயுள்ள பர்கூர் கொண்டப்ப நாயக்கண பள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (26). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக பூவரசன் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

    ×