search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 247605"

    • மின்கட்டண உயர்வை கண்டித்து 3 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    மதுரை

    மின் கட்டண உயர்வு, மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முனிச்சாலை சந்திப்பில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார்கள்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கருப்பாயூரணியில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கிழக்கு மாவட்ட செயலாளர்- அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    நாளை மறுநாள் (26-ந்தேதி) தேனியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் நாளை 3 இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க. வினர், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    • வரலாறு காணாத மின் உயர்வினை தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது.
    • மத்திய அரசின் மீது பழி போடுவதை விட்டுவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    கோவை:

    தமிழகத்தில் மின்சாரம் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பா ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று. ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை தங்கினார்.

    இதில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: வரலாறு காணாத மின் உயர்வினை தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இந்த மின்கட்டண உயர்வினால் தொழிற்சாலை செலவு அதிகரிக்க போகிறது.

    தற்ேபாதைய குடியரசு தலைவருக்கு நடந்த பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு முக்கியமான நிகழ்வு இருப்பதால் கோவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. டெல்லியில் இருந்தாலும் அவர் எண்ணங்கள் தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இருக்கின்றது.

    எந்த விலை உயர்வு ஏற்பட்டாலும் அதற்கு பா.ஜ.க காரணம் என்கின்றனர். எனவே மத்திய அரசின் மீது பழி போடுவதை விட்டுவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

    • மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு சொல்லவில்லை என பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
    • மத்திய அரசின் திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.

    மதுரை

    தமிழ்நாடு பா.ஜனதா பொருளாதாரப் பிரிவின் மாநிலத்தலைவர் எம்.எஸ்.ஷா இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தலுடன் தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள், திட்டங்களை செயல்படுத்தவில்லை. எனவே தமிழகம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி உள்ளது.

    இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை. மின் கட்டணத்தை மாற்றியமைக்க மட்டுமே கூறியது. ஒவ்வொரு மாநி லங்களின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் செய்ய முடியாத சாதனைகளை- பிரதமர் மோடி செய்து வருகிறார். அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்து உள்ளது ஆனால் மாநில அரசு வரியை குறைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்டத்தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மின் கட்டணத்தை எதிர்த்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

    பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    அவர் பேசுகையில், பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு அனுதினமும் மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு தற்போது மின்சார கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

    இதை கண்டித்து வருகிற 25-ந் தேதி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கருப்பாயூரணி பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலு சேர்க்கும் வகையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தி.மு.க. பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார் வட்டச் செயலாளர் என்.எஸ்.

    ×