search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் விழிப்புணர்வு"

    • வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கும் விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பை ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.
    • சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

    குடிமங்கலம்:

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டிகள் குடிமங்கலம் ஒன்றிய அளவில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.

    வெற்றி பெறும் முதல் 3 மாணவ மாணவிகள் வரும் 27 ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்கு ஆர்பிட்ராக முகமது அஸ்லாம், சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

    • செஸ் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார்.

    சிவகங்கை

    44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மகளிர் சுய உதவிகுழுவினர்கள் கூட்டாக இணைந்து ரங்கோலி கோலமிடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 445 ஊராட்சிகளிலும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செஸ் போட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து வண்ண கோலங்களால் விளக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×