search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருதி ஆட்டம்"

    • சித்தார்த்தின் 40-வது படத்தை ஸ்ரீகணேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் படித்தவர் சித்தார்த். அதன் பிறகு மணி ரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

    அதன்பிறகு வெளியான காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4 போன்ற படங்கள் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் தன்னை நிலநடுத்திக்கொண்டார் நடிகர் சித்தார்த்.

    அதுமட்டுமில்லாமல் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

    இதனைத்தொடர்ந்து நடிகை அதிதி ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும், இந்த படம் உலகளாவிய ஈர்ப்பு கொண்ட கதையைக் கொண்டிருக்கும். எல்லோரது இதயங்களிலும் எதிரொலிக்கும் படமாக அமையும். இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.
    • இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்த படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    குருதி ஆட்டம்

    இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி  "ஆஹா'' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.
    • இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் அதர்வா பேசியதாவது, இந்த படம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களால் தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கணேஷ் இந்த கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.


    அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஸ்ரீ கணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன். இயக்குனர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 5-ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார். 

    • இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.
    • இப்படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    குருதி ஆட்டம்

    இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, "எனது உதவியாளனாக இருந்த ஸ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது.

    ஸ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள். இந்த படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறினார்.

    • இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.
    • இப்படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    '8 தோட்டாக்கள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கபடி களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலரை இயக்குனர்கள் வெங்கட்பிரபு, பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.




    • இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.
    • இப்படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    '8 தோட்டாக்கள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    குருதி ஆட்டம்

    இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.


    குருதி ஆட்டம் போஸ்டர்

    அதன்படி சேது என்ற கதாபாத்திரத்தில் வத்சன் சக்ரவர்த்தியும் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் கண்ணா ரவியும் நடித்திருக்கின்றனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    ×