search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளீஸ்வரி கல்லூரி"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த 115 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றத்தின் தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கான திறனறிப்போட்டிகள் நடந்தன. துணை முதல்வர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    துறைத்தலைவர் பெமினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''ஆளுமை வளர்ச்சி மற்றும் மென்திறன்'' என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் பேசினார்.

    இலக்கிய மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடகம், நடனம், ஆங்கிலப் பாட்டுப்போட்டி, இலக்கிய அணிவகுப்பு, மவுன நாடகம் போன்ற போட்டிகள் நடந்தன.

    முதுகலை 2-ம் ஆண்டு மாணவி மரிய கிறிஸ்டினா வரவேற்றார்.

    இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் பிரதீப் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த 115 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப் பணி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளியில் (எல்வின் நிலையம்) நடந்தது. பள்ளி நிர்வாகி தயாளன் பர்னபாஸ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட வேம்பு. புங்கை. அரசமரம் மற்றும் புளியமர கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

    இந்த மரக்கன்றுகள் சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களால் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    75 இளங்கலை வணிகவியல் துறை மாணவர்கள் மற்றும் 50 மன

    வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் விரிவாக்கப் பணி பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி கிளையின் வங்கி மேலாளர்கள் காசிராஜன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு 300 மரக்கன்றுகளை வழங்கினர்.

    அவைகளை கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மனோஜ்குமார், ராஜூவ் காந்தி, தேவி ஆகியோர் நட்டு ஏற்பாடு செய்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
    • வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும் பொழுது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த ''டெக்னோ ஸ்கூல்'' நிறுவனம் வளாகத் தேர்வை நடத்தியது. இதில் கணினித் துறைகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். நிறுவன மேலாளர் சாமுவேல் மார்டின் நிறுவனத்தின் நோக்கம், அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.

    பின்னர் நிறுவனத்திற்குத் தேவையான பணியா ளர்களை எழுத்துத்தேர்வு, கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்தார்.

    இந்த வளாகத் தேர்வி ற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப் பொறுப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் செய்திருந்தனர். முனைவர் லட்சுமணக்குமார் நன்றி கூறினார்.

    ×