search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன போராட்டம்"

    • மாண்டஸ் புயல் பாதிப்பை கணக்கெடுக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மைதுறையினர் கணக்கெ 2 டுக்க வலியுறுத்தி நேற்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.

    3 அப்போது விவசாயிகள் கையில் தூக்கு கயிறு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்கான விண்ணப்ப படிவத்துடன் வந் திருந்தனர். பின்னர் அவர்கள் மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மை துறையினர் கணக்கெடுக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற்று தர வேண்டும், விவசாயிகளை கடனாளியாக்கி தற்கொலைக்கு தள்ளக்கூடாது என்பன உள் 4 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், மாண்டஸ் புயல் காரணமாக சம்பா நெல் அறுவடை, வாழை மகசூல் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே புயல் பாதிப்புகளை வேளாண்மைதுறையினர் கணக்கெடுக்க வேண்டும். லாபகர மான விலை கொள்முதல் செய்யாததாலும், வெள்ளம், வறட்சி பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு, இழப்பீடு வழங்காததாலும் விவசாயிகள் கடனாளியாகி தற்கொலை செய்கின்றனர்.

    மேலும் தமிழக அரசு பயிர் மற்றும் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தவணை தவறும் முன்னர் புதுப்பிக்க கடன்தாரருக்கு தெரி யப்படுத்தாமல் அசல் கடனுடன் வட்டி, அபராத வட்டி இணைத்து மேலும், மேலும் கடன் சுமை ஏற்றுகின்ற நடவடிக் கையால் தற்கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது என்றார்.

    இதில் நார்த்தாம்பூண்டிசிவா துரிஞ்சாபுரம் அய்யாயிரம், பாலானந்தல் பிரபு, சொரகுளத்தூர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை வசதி கேட்டு நடந்தது
    • பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சேரும் சகதியமாக காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மெய்யூரில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சேரும் சகதியுமாக உள்ள சாலையில் ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலை வசதி கேட்டு ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று 32-வது நாளாக நீடித்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செ ங்குத்து சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து தினமும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தலைகீழாக நின்று தண்ணீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் எங்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். நாங்கள் 13 ஆண்டுகள் வேலை செய்து இருக்கிறோம். அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்றனர்.

    இந்த போராட்டம் இன்று 32-வது நாளாக நீடித்தது. அப்போது ஆதிவாசி வேடமிட்டு சுதந்திரம் வாங்கியும் இந்த தமிழகத்தில் நமக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை என்ப தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து உள்ளனர்.

    • குண்டும் குழியுமாக இருந்தால் ஆத்திரம்
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் சாலைகள் போடப்படாததால் குண்டு குழியுமாக காட்சியளிக்கின்றன.

    மோசமான சாலை

    தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் சேரும் சகதியுமாக உள்ளன.அதனால் பொதுமக்கள் படாத பாடு பட்டு வருகின்றனர்.

    இது குறித்து அங்குள்ள கிராம மக்கள் பலமுறை மனுக்கள் மற்றும் புகார் அளித்தும் சாலைப்போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பொது மக்கள் தெருக்களில் மழைநீர் நிரம்பிய பள்ளங்களில் மரக்கன்றுகளை நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொம்மிகுப்பம் உட்பட மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன . மழைக்காலத்தில் எங்கள் குழந்தைகள் இடுப்பளவு தண்ணீரில் நனைந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. கிராமத்தில் உள்ள சாலைகளை சீரமைப்பது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பொம்மிக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், கிராமத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள திருப்பத்தூர் செல்கின்றனர்.

    இங்கிருந்து ஒரு சில பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாலைகள் சரியாக இல்லாத பஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், நோயாளிகள் மற்றும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனை உள்ள திருப்பத்தூருக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

    சிறிது நேரம் மழை பெய்தாலும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.

    எந்த சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ள ப்படவில்லை, தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறோம்.இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×