என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண்டேலா"
- 68வது தேசிய திரைப்பட விருதுகளில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா படம் விருதுகளை வென்றது.
- இதில் விருதை வென்ற மண்டேலா படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இதுகுறித்து பேசியுள்ளார்.
68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குனரின் படம்' பிரிவில் தயாரிப்பாளருக்கான விருதை 2020-ஆம் ஆண்டு வெளிவந்த 'மண்டேலா' திரைப்படம் வென்றது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் கூறியதாவது, "இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் இப்படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குனரின் படம்' மற்றும் 'சிறந்த வசனகர்த்தா' உள்ளிட்ட விருதுகளை வென்ற திரு.மடோன் அஸ்வின் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்றும், பிரத்தியேக திறமைசாலிகளை கண்டறிந்து ஆதரிக்க வேண்டும் என்கிற குறிக்கோள்களுடன் ஒயிநாட் ஸ்டூடியோஸ் 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பயணத்தில் இயக்குனர்கள் சி.எஸ்.அமுதன், பாலாஜி மோகன், மடோன் அஸ்வின், நிஷாந்த் கலிதிண்டி போன்றவர்களை அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். குறிப்பாக, இந்த பிரிவில் எங்களுக்கு இவ்விருது கிடைத்ததை, எங்களது பன்னிரெண்டு ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். பல்வேறு வளர்ந்து வரும் திறமைசாலிகளுடன் எங்களது எதிர்கால படங்கள் அமையவுள்ளன. இந்த விருது என்னை போலவே அவர்களுக்கும் மிகவும் ஊக்கமளிக்கிறது.
ஒரு திரைப்படம் தனது பார்வையாளர்களை அமைத்துக்கொள்ளும் என்று நான் எப்போதும் உறுதியாக நம்புகிறேன். கலாச்சாரம் மற்றும் மொழித் தடைகளைத் தாண்டி உலகம் முழுவதிலும் இருந்து "மண்டேலா" தொடர்ந்து பெற்றுவரும் ஆதரவும், எப்போதும் தரமான கதைக்களம் கொண்ட படங்களை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும். மண்டேலா திரைப்படத்தை கொண்டாடிய பார்வையாளர்களுக்கு நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.
68வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
- 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
- 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மண்டேலா'. இத்திரைப்படம் முதலில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
மண்டேலா
'மண்டேலா' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது இயக்குனர் மடோன் அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்