search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேணுகாச்சார்யா"

    • காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம்.

    பெங்களூரு :

    தாவணகெரே மாவட்டம் ஒன்னாளியில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரேணுகாச்சார்யாவின் வீட்டுக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அங்கு எடியூரப்பா அருகில் கண் கலங்கியபடி ரேணுகாச்சார்யா இருந்தார். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என்று எடியூரப்பாவிடம் ரேணுகாச்சார்யா கேட்டுக் கொண்டார். பின்னர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மிகப்பெரிய தலைவர் எடியூரப்பா. அவர், தேர்தலில் போட்டியிடுவது இல்லை, கட்சியை வளர்க்கும் பணியில் மட்டும் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். எடியூரப்பா தனது முடிவை திரும்ப பெற வேண்டும். அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு பெறக்கூடாது.

    மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம். அவர் கட்சி வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எடியூரப்பா பற்றி பேசும் போது ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுதார்.

    ×