search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் மில்"

    • அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,
    • கைது செய்தவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 42). இவர் திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளமடை என்ற இடத்தில் வாடகை கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நூல் மில் நடத்தி வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு மில்லில் தீ விபத்து ஏற்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சம்பவத்தன்று செந்தில்குமார் மில்லின் அறையை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மில் அறையின் பூட்டை உடைத்து அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,

    இது குறித்து செந்தில்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது முத்தூர் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்ததில் நூல் மில்லில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளகோவில், எம்.ஜி.ஆர் நகர்., பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கருப்புசாமி , நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கவுதம் என்பது தெரியவந்தது.

    இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரெட்டில வலசு பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. நேற்று பகலில் அங்குள்ள எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் யாருக்கு எவ்வித காயம் இல்லை. எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின. 

    • நூல் மில்லில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • மில் இயங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கரும்புகை வந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்கு மார் ( வயது41) என்பவர் திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள வெள்ளமடை என்ற இடத்தில் நூல் மில் நடத்தி வருகின்றார்.

    இந்த மில்லில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மில் இயங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கரும்புகை வந்துள்ளது. உடனே வேகமாக பஞ்சு மற்றும் எந்திரத்தில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் எந்திரங்கள், பஞ்சு மற்றும் கட்டிடங்கள் சேதமாயிற்று சேதங்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது, இந்த தீ விபத்தினால் தொழிலாளர்கள் எவ்வித காயம் இன்றி தப்பினர்.

    • எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.
    • காங்கேயம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சரவணன் ( வயது 48) என்பவருக்கு சொந்தமான ஓயி நூல் மில் வெள்ளகோவில், செங்காளிபாளையம் ரோட்டில் உள்ளது.இந்த மில்லில் நேற்று பகல் திடீரென எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை அறிந்த மில் ஊழியர்கள் உடனடி யாக வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.தீயை அணைப்பதற்குள் எந்திரம், நூல் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாயிற்று.

    நல்வாய்ப்பாக ஊழியர்கள் யாருக்கு காயம் ஏற்படவி ல்லை .எரிந்து சேதமடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    • நூல் மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • 5 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்கபுரம் ரோடு பிரிவில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீர் மின் கசிவு காரணமாக எந்திரத்தில் பற்றிய தீ அருகே இருந்த பஞ்சுமூட்டைகளில் பற்றியதால் மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு படையினர் மற்றும் 5 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு மற்றும் எந்திரங்கள் உள்ளிட்டவைகளில் பற்றிய தீ கட்டிடத்தின் மீதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதற்கு தாமதமானது. இதில் பல லட்சம் மதிப்பிலானஎந்திரங்கள்,பஞ்சு மூட்டைகள், நூல் மூட்டைகள் எரிந்து சேதமாகின. இந்த திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் ஊழியர்கள் நேற்று பகலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனால் ஊழியர்கள் காயமின்றி தப்பினர். சேதம் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    • பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது.
    • தீ விபத்தினால் எந்திரம், கட்டிடம், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து நாசமாயிற்று.

    வெள்ளகோவில், ஆகஸ்ட். 1

    வெள்ளகோவில் அருகே உள்ள அரியாண்டிவலசு என்ற இடத்தில் கே.தங்கவேல் (40) என்பவரின் ஓ. ஈ. நூல் மில் உள்ளது. இந்த மில்லில் நேற்று காலை 9 மணியளவில் பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. உடனே தீ பரவி பஞ்சில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    உடனே ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் எந்திரம், கட்டிடம், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து நாசமாயிற்று. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. ஊழியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த தீ விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் சின்னவடுகபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 50 ). இவர் அந்த பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 பேல் கழிவுப்பஞ்சுகள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×