என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்"
- சொத்துவரி, மின்கட்டணம் உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். நகரச் செயலாளர் பாட்ஷா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி கலந்துக் கொண்டு பேசினார்.
மாவட்ட அவைத் தலைவர் டிகேபி. மணி, ஜெ.பாலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பவானி அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகேஷ்வரன், தெள்ளார் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அர்ஜுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் கு.வெங்கடேசன் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன், அருணகிரி, ஆர்.கே.மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வி.முனுசாமி, ஜி புவனேந்திரன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், டி.பி. துரை, தணிகாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தி.மு.க. அரசை கண்டித்தும் திருப்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது.
ஓன்றிய செயலாளர்கள் டாக்டர் என. திருப்பதி, சி. செல்வம் தலைமை வகித்து லண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் நகர செயலாளர் டி. டி. குமார், தொகுதி செயலாளர் கே எம் சுப்பிரமணியம் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், டாக்டர் வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ், கலந்து கொண்டனர்.
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொணடனர்
ஆலங்காயம்:
ஆலங்காயத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான கோவி. சம்பத்குமார், பேரூராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடக்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஆர். மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாண்டியன், வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம், உட்பட பலர் கலந்து கொணடனர்.
- அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஒன்றிய செயலாளர் பையூர் ரவி தலைமை தாங்கினார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பையூர் ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் விமல், மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி.சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சமரசம், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், ஒன்றிய அவை தலைவர் சுந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், சண்முகம், பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு மின் கட்டணம், பால் விலை, விலைவாசி உயர்வு, உள்ளிட்டவைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ். அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர அவை தலைவர் ஆர்.கே.அன்பு, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர துணை செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வி.என். தனஞ்செயன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.என்.சுந்தரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.ஐ.அன்வர்பாஷா, நகர துணை செயலாளர் கே.அமுதா, மாவட்ட பிரதிநிதிகள் எம்.கே.சலீம், அட்சயாவினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லோகநாதன், ஒன்றிய செயலாளர் வி.ராமு, டி. சிவா, பொகளூர்பிரபாகரன், சீனிவாசன், ஆனந்தன், மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ் குமார், வழக்கறிஞர் கே.எம்.பூபதி உள்பட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத் குமார் ஆகியோர் தொடக்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடிவேல், மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் எஸ். பாரதிதாசன், பேரூர் கழக செயலாளர் சரவணன், சிவக்குமார், நாட்டறம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு
ஆற்காடு நகர அ.தி.மு.க. சார்பில் ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் ஜிம்.சங்கர் தலைமையில் தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.இதில்
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோபி:
அ.தி.மு.க. சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (29-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு நாளை (29-ந் தேதி) காலை 9 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் நடக்கிறது. இதில் பவானி சாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- வாடிப்பட்டியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தமிழக அரசை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரூர் செயலா ளர் டாக்டர் கே.எஸ். அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.வீ. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேச ன், அரியூர் ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா வரவேற்றார். கவுன்சிலர் கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இந்த விடியா அரசு அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கி விட்டது.
கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும். அவரை நீக்கும் வரை அ.தி.மு.க.வில் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன், மருதையா, ரவி செல்வராஜ், பொன்ராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூர் துணை செயலாளர் சந்தன துரை நன்றி கூறினார்.
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தி.மு.க. அரசை கண்டித்து அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்து பேசினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
- காய்கறிகளை மாலையாக அணிந்து பங்கேற்ற பெண் நிர்வாகிகள்
- ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில் :
மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அனைத்து துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அவை தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், சிவ செல்வராஜன், மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், சாந்தினி பகவதியப்பன், பார்வதி, ஆர்.ஜே.கே. திலக், பகுதிச் செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், ஜெய சுதர்சன், மாமன்ற உறுப்பினர்கள் கோபால சுப்பிரமணியம், சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விலை வாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாரி, இஞ்சி, தக்காளி, மிளகாய் மற்றும் பருப்பு ஆகியவற்றை வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காய்கறிகளை வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், குளச்சல் நகர செயலாளர் ஆ ண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா கழுத்தில் தக்காளியை மாலை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் வெண்டைக்காயை மாலையாக அணிந்திருந்தார். இதே போல் பெண்கள் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கலந்து கொண்டதால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.