என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவலாளி கொலை"
- படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்.
இவர் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து அந்த நிறுவனத்தின் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் முன் விரோதமா, பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த காட்டூரை சேர்ந்தவர் முரளி (வயது 48). இவர் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருடன் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பாக்கம் பகுதி சேர்ந்த உதயன் (42) என்பவரும் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் 2 பேரும் பணியில் இருந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி கைகலப்பானது. அப்போது ஆத்திரம் அடைந்த உதயன் கட்டையால் முரளியை சரமாரியாக தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய உதயன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
காட்டூர் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட முரளியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முரளிக்கு கவுரி என்ற மனைவியும் தர்ணிகா (7)என்ற பெண் குழந்தையும் உள்ளது.
காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
- சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை சாமிபிள்ளை தோட்டம் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது 57) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி காளியம்மாள் (எ) காஞ்சனா (வயது 42) இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் மகன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
குடிபழக்கத்திற்கு அடிமையான முத்துகுமரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி பிள்ளைகளை பிரிந்து சென்றுள்ளார். தற்போது பிளாட்பாரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று புதுவை வெள்ளாழர் வீதி பேங்க் ஆப் பரோடா அருகில் உள்ள வாய்க்காலில் முகத்தில் சிராய்ப்பு காயத்துடன் பின் தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நள்ளிரவு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த முத்துகுமரனின் பாக்கெட்டில் பணம் ஏதாவது இருக்கிறதா என கைவிட்டு பார்க்கின்றனர்.
உடனே சுதாகரித்துக் கொண்டு எழுந்த முத்துகுமரன் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனே அவர்கள் 3 பேரும் சரமாரியாக அவரை கையால் தாக்குகின்றனர். பின் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். மயங்கி முத்துகுமரன் அங்கே விழுந்து கிடக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
எனவே அவர்கள் 3 பேரும் அடித்ததில் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து கொலை செய்த 3 பேரையும் போலீசார் பைக் எண்ணை வைத்து தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- போலீசார் விரைந்து சென்று ஞானராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் (வயது55). இவர் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் காவலாளியாக இருந்து வந்தார்.
அந்த லாரி செட்டில் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை லாரி டிரைவர்கள் எழுந்து பார்த்த போது லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தென்பாகம் போலீசில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி டி.எஸ்.பி. (பொறுப்பு) சம்பத், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஞானராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார் ? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவேரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்தார்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அந்த பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது78) காவலாளியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்தார்.
கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது மர்மமான முறையில் நடராஜன் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரி யர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
4 பேர் பிடிபட்டனர்
விசாரணையில் இரவு நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் சிலர் மது குடிக்கவும்,. சீட் ஆடுவ தற்கும், கஞ்சா போடு வதற்கும், பள்ளி வளா கத்திற்கு வருகின்றனர். சம்பவத்தன்று அந்த வாலி பர்களுக்கும் நடராஜருக்கும் இடையே வாக்குவாத ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதனால் அந்த அந்த வாலிபர்கள் நடராஜனை கழுத்து நெறித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி சேர்ந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும் மருமகனும் தெரிவித்தனர்.
- மாமனாரை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய மருமகன் பாக்யராஜை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 61).
இவர் வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிறிஸ்துதாசியின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து கிறிஸ்துதாஸ் மூன்றாவது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரது மகள் ஜான்சி மருமகன் பாக்யராஜ் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கிறிஸ்துவதாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். கிறிஸ்து தாஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும் மருமகனும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கிறிஸ்துதாசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். கிறிஸ்துதாசின் மருமகனிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின்னர் மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாமனாரை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய மருமகன் பாக்யராஜை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாக்யராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-
நான் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வருவேன். அப்போது எனது மாமனார் உடன் மது அருந்துவது வழக்கம். நேற்று இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது எனது மாமனார் கியாஸ் சிலிண்டருக்கு ஆயிரம் பணம் கேட்டார். அப்போது நான் அவரிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். பின்னர் நான் அங்கிருந்து சென்று விட்டேன். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது என்னிடம் அவர் பணம் கேட்டதால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து அந்த பகுதியில் கிடந்த கம்பியால் அவரை தாக்கினேன். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கம்பியை பக்கத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். இதைத்தொடர்ந்து எனது மனைவியுடன் எனது மாமனார் பாக்யராஜ் மயங்கி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் கைது செய்யப்பட்ட பாக்யராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாமனாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கும்பளம் ஊராட்சிக்குட்பட்ட கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் திப்பையப்பா (வயது42). இவர் கும்பளம் காட்டுபகுதி அருகே ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி துளசி.
இந்த நிலையில் திப்பையப்பா தோட்டத்துக்கு இரவு காவலுக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் இருந்து தோட்டத்து காவலுக்கு சென்றார்.
இதையடுத்து இன்றுகாலை திப்பையப்பா தோட்டத்துக்கு செல்லும் பாதையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
முதல் கட்ட விசாரணையில் தலையில் கல்லை போட்டு திப்பையப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. காட்டுப்பகுதியில் மர்ம பர்கள் இரவு இந்த சம்பவத்தை செய்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
இந்த கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்