search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சல் நிலையம்"

    • சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.
    • வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது

    திருப்பூர் : 

    அஞ்சல் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் நேரத்துக்கு கிடைக்க செய்ய தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.

    அவ்வகையில் திருப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டு விடுகிறது. இரவு 7 மணி வரை பணம் செலுத்த, பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தபால் பரிவர்த்தனைகளும் இரவு வரை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர தபால் துறை மூலம் வழங்கப்படும் சேவை மற்றும் செயல்பாடுகளை வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர் தபால் அலுவலகத்தில் ஏதேனும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு 0421 2206849 என்ற எண்ணில் தபால் அலுவலரை அழைக்கலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் எதிர்முனையில் பேசுபவர்கள் தபால் அலுவலகம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றனர். 

    • இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் நடவடிக்கை.
    • குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடி விநியோகிக்க ஏற்பாடு.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. தேசியக் கொடி விற்பனைக்காக சுதந்திர தினம் வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனையை எளிதாக்க, அனைத்து அஞ்சல் நிலையங்களும் சுதந்திர தினத்திற்கு முன் விடுமுறை நாட்களில் செயல்படும். 

    இந்த பொது பிரச்சாரத்தை செயல்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய தபால் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது விடுமுறை நாட்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 9 மற்றும் 14 தேதிகளில் அஞ்சல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடிகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.
    • திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி துணை அஞ்சல் நிலையத்திற்கு உட்பட்டு அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், வித்யாலயம்,கரைப்புதூர், சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.

    இந்த அஞ்சல் நிலையத்தில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய காலை 8மணிமுதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    காலை 9மணிக்கு அஞ்சல் நிலையம் திறக்கப்படுகிறது. ஆனால் காலை 10.30 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் வேலைக்கு செல்லாமல் காலையிலிருந்து காத்து நிற்கும் பொதுமக்கள் கவலை அடைகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண அஞ்சல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×