என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 249436"
- மீனை குழம்பு, வறுவல், பிரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள்.
- இன்று மீனை வைத்து வடை செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.
பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.
ருசியான மீன் வடை தயார்.
இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தேங்காய் எண்ணெயில் செய்யும் மீன் கறி சுவையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிலை மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி - 1
பூண்டு - 7
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.
மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கேரளா மீன் கறி தயார்.
- மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.
மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
அருமையான பிஷ் கபாப் ரெடி.
- முட்டை, மீன் வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மீன் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 2
முட்டை - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கொத்துமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
மிளகு - விருப்பத்திற்கேற்ப
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
மீன் சூடு ஆறியதும் முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை சிறிது சிறிதாக பிய்த்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் பிய்த்து வைத்த மீன், கொத்தமல்லி, மிளகு தூள் தூவவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான வித்தியாசமான மீன் ஆம்லெட் தயார்.
- குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - 1/2 கிலோ
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.
கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
இப்போது சூடான மீன் மிளகு வறுவல் ரெடி.
- மீனை விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
- புது விதமான எளிதான மீன் வறுவல் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 6
மல்லி - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
எலுமிச்சை - 1
செய்முறை
மீனை நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு வர மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீன் வருவளுக்கு தேவையான மசாலா இப்பொழுது ரெடியாகி விட்டது.
அரைத்த மசாலாவில் எலுச்சை சாறு சேர்த்து அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா கலந்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மொறு மொறு இடித்து அரைத்த சுவையான மீன் வறுவல் ரெடி.
- குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மீன் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள் நீக்கிய மீன் துண்டுகள் - கால் கிலோ
முட்டை - 2
சோளமாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
மீன் துண்டுகளை நன்றாக கழுவி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அவைகளை உதிர்த்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக கலக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அதனுடன் மீன் துண்டுகளை கொட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இந்த மீன் கலவையை கொதிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான மீன் பக்கோடா தயார்.
- குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மீன், தேங்காய் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துண்டு மீன் - 250 கிராம்
சோளமாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.
- தீபாவளி என்றாலே பிரியாணி தான் ஸ்பெஷல்.
- இந்த தீபாவளிக்கு ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்து அசத்தலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் - 1 கிலோ
பாசுமதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 5
தேங்காய்பால் - 1 கப்
தயிர் - 400 கிராம்
எண்ணெய் - 4 ஸ்பூன்
நெய் - கால் கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது - 2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
எலுமிச்சை - 1
குங்குமப்பூ - சிறிது
உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிது
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு - தலா 3
செய்முறை
* குங்குமப்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
* வெங்காயம், புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும்.
* மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக முறுவலாக பொரித்து எடுக்கவும்.
* மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
* அத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
* அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.
* பாத்திரத்தில் நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதி வந்த பின்னர் 3 நிமிடத்தில் (அரை பாகம் வெந்தால் போதும்) வடிக்கவும்.
* பிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.
* அதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்குமப்பூ கலவையை லேசாக தெளித்து விட்டு நன்றாக மூடி விடவும். ஓரங்களில் காற்று புகாமல் நன்றாக மூட வேண்டும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.
* தம் அடங்கியதும் திறக்கவும்.
* சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.
- கோலா உருண்டைகளில் பல வகைகள் உண்டு.
- இன்று நாம் காண இருப்பது மீன் கோலா உருண்டை.
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் - 250 கிராம்
பிரெட் தூள் - தேவையான அளவு
சோள மாவு - 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீன் துண்டுகள் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்த மீனை ஆறவிட்டு எள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் போது கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இப்பொழுது ஒரு பவுலில் சோள மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை பிரெட் தூளில் நன்றாக பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார்.
- தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
- குழந்தைகளுக்கு இந்த மீன் மிளகு மசாலா மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
துண்டு மீன் – அரை கிலோ
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
கொத்தமல்லி இலை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
கறிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.
மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும்.
நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான மீன் மிளகு மசாலா ரெடி.
- குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும்.
- சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பூண்டு - 20 பல் பெரியது
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - ½ ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்