search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி சாம்பியன்ஷிப்"

    • விழுப்புரத்தில் வருகிற மாா்ச் 9-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • குழுக்களின் வீராங்கனைகள் பங்கேற்கலாம், வயது வரம்பு இல்லை.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழக செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் 69 -வது மாநில அளவிலான பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் விழுப்புரத்தில் வருகிற மாா்ச் 9-ந்தேதி முதல் 12 -ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தப்போட்டியில் பங்குபெற திருப்பூா் மாவட்டத்தில் பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் மணி மஹாலில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அனைத்து குழுக்களின் வீராங்கனைகள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. 75 கிலோ மற்றும் அதற்கு மேல் உள்ள திருப்பூா் மாவட்ட வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் 12 வீராங்கனைகள் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

    திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம், 3 மற்றும் 4-வது பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் கபடி அணி மற்றும் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணி பங்கேற்கலாம்.
    • மாவட்ட சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பெண்கள் அணிக்கானவர் தேர்வு செய்யப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி காங்கயம் ரோடு மாவட்ட கபடி கழக மைதானத்தில் வரும் 30-ந்தேதி நடக்கிறது.இதில், பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் கபடி அணி மற்றும் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணி பங்கேற்கலாம்.

    போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் இல்லை.போட்டி காலை 9:30க்கு துவங்கும்.9 மணிக்கு முன் வரும் அணிகளுக்கு காலை உணவு பயண செலவுக்கு அணிக்கு, 500 ரூபாய் தரப்படும்.போட்டியில் பங்கேற்று விளையாடும் அணிகளில் இருந்து, மாவட்ட சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பெண்கள் அணிக்கானவர் தேர்வு செய்யப்படுவர். சீனியர் - வயது வரம்பு இல்லை. எடை 75 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.ஜூனியர் -2002 செப்டம்பர் 4ந் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். 65 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.சப் - ஜூனியர் 2006, செப்டம்பர் 4ந் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். எடை 55 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.மாநில ஜூனியர் கபடி போட்டி திருவள்ளூரில் ஆகஸ்டு 5 முதல் 7 வரை 3 நாட்கள் நடக்கிறது. மாவட்ட அணியில் தேர்வாகும் வீராங்கனைகள் மாவட்ட போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    பள்ளி, கல்லூரிகள், மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவன அதிகாரியின் ஒப்புதலோடு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    ×