என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடலூர் வாலிபர் கைது"
- இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி (வயது 17) என்ற மாணவி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 17-ந்தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர். இந்நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படிசேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ் தலைமையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தனியார் பள்ளி முன்பும், கனியாமூர் 4 முனை சந்திப்பு, சின்னசேலம் சாலை பங்காரம் சாலை கச்சிராயபாளையம் சாலை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 306 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வன்முறையின் போது போலீசார் பஸ்சை எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் பஸ்சை எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட பசுங்காயம் பகுதியைச் சேர்ந்த வசந்தன் (வயது 19), கலவரத்தின் போது பள்ளி கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியதாக கடலூர் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனிஷ் (26) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்
அதன்படி இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்