என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை"

    • சிகிச்சை பலனின்றி சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 35). செங்கல் சூளை தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ரெஜிமன் (19). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் காற்றாலைகளில் வேலைக்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார்.

    இவ்வாறு அவர் சேமித்து வைத்திருந்த பணத்தின் ரூ.28 ஆயிரத்தை சந்தனகுமாருக்கு கடனாக கொடுத்துள்ளார்.

    குறிப்பிட்ட காலத்தில் அந்த பணத்தை சந்தகுமார் திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ரெஜிமன் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை ரெஜிமன், சந்தனகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது கடனை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டார். அப்போது சந்தனகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரெஜிமனை வெட்ட முயன்றுள்ளார்.

    இதைப்பார்த்த ரெஜிமன் ஆவேசமடைந்தார். மேலும் சந்தனகுமாரிடம் இருந்து அரிவாளை பறித்த ரெஜிமன் அந்த அரிவாளால் சந்தனகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக பழவூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரெஜிமனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் பலியானதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சாமி பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது38). பா.ஜ.க. இளைஞரணி முன்னாள் துணைத்தலைவரான இவர் தற்போது காமராஜர் நகர் பா.ஜ.க. பொறுப்பாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் இன்று (27-ந் தேதி) தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அவரது பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை உமா சங்கர் கவனித்து வந்தார்.

    நேற்று இரவு கருவடிக்குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்து வரும் பிறந்த நாள் விழா பணிகளை பார்த்து விட்டு இரவு 11.30 மணியளவில் வெளியே வந்தார்.

    அப்போது அங்கு 5 பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் உமாசங்கரை சுற்றி வளைத்தது. இதனை கண்ட உமாசங்கர் தன்னை தீர்த்து கட்ட கும்பல் வந்துள்ளதை அறிந்து அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓடஓட விரட்டி உமாசங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உமாசங்கர் இறந்து போனதை உறுதி செய்த பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    தகவலறிந்து அங்கு வந்த உமாசங்கரின் தாய், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடந்த உமாசங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையில் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அப்போது அவரது தாய், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உமாசங்கரின் உடலை எடுக்கக்கூடாது என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின்னரே நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    • சொத்து பிரச்சினையில் ஆறுமுகத்தின் உறவினர் ஒருவரே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே பெரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35), கூலி தொழிலாளி.

    இவர் நேற்றிரவு வழக்கம் போல வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை கத்தியால் கழுத்து மற்றும் மார்பு உள்பட பல பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

    இதனால் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவர் சத்தம் கேட்டு ஆறுமுகத்தின் மனைவி சரஸ்வதி ஓடி வந்தார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆறுமுகத்தை பார்த்து சரஸ்வதி கதறி துடித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மோப்ப நாய் ஸ்டபி அழைத்து வரப்பட்டது . அது வீட்டைசுற்றிலும் ஓடியது. கைேரகை நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி உள்ள கொலையாளியின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள.

    இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது சொத்து பிரச்சினையில் ஆறுமுகத்தின் உறவினர் ஒருவரேஅவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் அண்ணன் முருகன்(55) கடந்த 29-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்த நிலையில் தற்போது அவரது தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முருகன் சாவுக்கும், இந்த கொலைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உறவினர்கள் அதிக அளவில் அங்கு திரண்டுள்ளனர். இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமைறைவான காளிராஜனை தேடி வருகின்றனர்.
    • வாரிசு வேலைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி முருகேஸ்வரி(வயது 50). இவர்களது மகன் ரவி. இவர் சிவகாசி மாநகராட்சியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரதிலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரவி திடீரென இறந்தார். அவரது வேலை கருணை அடிப்படையில் வாரிசுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரதிதேவி தனது கணவரின் வேலையை தனக்கு வழங்க வாரிசு சான்றிதழில் கையொப்பமிடுமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு முருகேஸ்வரி மறுத்துவிட்டார்.தனது மகனின் வாரிசு வேலையை பேரனுக்கு வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் ரதிலட்சுமிக்கும், மாமியார் முருகேஸ்வரிக்கும் சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று குடும்பத்தை சேர்ந்த பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன் பங்கேற்று வாரிசு வேலை தொடர்பாக கடுமையாக பேசினாராம்.

    இன்று காலையும் சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள முனியப்பன் என்பவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன் தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரியை சரமாரியாக குத்தினார். அப்போது அருகில் இருந்த முனியப்பனின் மனைவி தமயந்தி கருப்பாயி(60) தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் 2 பேரும் ரத்த வௌ்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமைறைவான காளிராஜனை தேடி வருகின்றனர்.

    வாரிசு வேலைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியில் மூதாட்டி நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டி திறந்த நிலையில் இருந்தது. தனியாக இருக்கும் மூதாட்டியை தாக்கி விட்டு, மர்ம நபர்கள் பணம், நகை கொளை அடித்து சென்ற இருக்கலாம் என, தெரிகிறது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கந்தம்மாள் (வயது 90), அவரது கணவர் ராமசாமி இறந்த விட்ட நிலையில், அவர் தனியாக வசித்து வருகிறார்.

    கந்தம்மாள் நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கந்தம்மாள் உடலை கைப்பற்றி விசாரனை செயதனர்.

    மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டி திறந்த நிலையில் இருந்தது. தனியாக இருக்கும் மூதாட்டியை தாக்கி விட்டு, மர்ம நபர்கள் பணம், நகை கொளை அடித்து சென்ற இருக்கலாம் என, தெரிகிறது.

    இது குறித்து பள்ளிபா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். மூதாட்டி கந்தம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • சர்க்கரை கொலை குறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தை சேர்ந்தவர் சர்க்கரை(வயது 51). இவர் திருநகர் அ.ம.மு.க. பகுதி செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி அன்னலட்சுமி (48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சர்க்கரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் அவர்களுக்கு இடைேய மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்பு சர்க்கரை வீட்டிற்கு வெளியே இருந்த கயிற்று கட்டிலில் படுத்து தூங்கி விட்டார். அவரது 2 மகன்கள் மற்றும் மனைவி அன்னலட்சுமி வீட்டுக்குள் படுத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் எழுந்த அன்னலட்சுமி, வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் தலையில் பெரிய கல்லை எடுத்து வந்து போட்டுள்ளார். மேலும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த சுடு தண்ணீரை கணவரின் உடல் முழுவதும் ஊற்றியுள்ளார்.

    இதில் வலி தாங்க முடியாமல் சர்க்கரை அலறியுள்ளார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத அன்னலட்சுமி, கணவர் சர்க்கரையை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். மனைவியின் அடுத்தடுத்த கொடூர தாக்குதலால் சர்க்கரை படுகாயம் அடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    தந்தை சர்க்கரையின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டுக்குள் படுத்து தூங்கிய மகன்கள் எழுந்து வந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் வந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே சர்க்கரை ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், சர்க்கரையை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்த அன்னலட்சுமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். சர்க்கரை கொலை குறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சர்க்கரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சர்க்கரையின் மகன்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சர்க்கரையை தலையில் கல்லை போட்டும், உடலில் வெந்நீரை ஊற்றியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொடூரமாக கொன்ற அவரது மனைவி அன்னலட்சுமி மீது வழக்கு பதிந்தனர்.

    சர்க்கரையை அவரது மனைவி அன்னலட்சுமி எதற்காக கொன்றார்? அதிலும் கொடூரமாக கொலை செய்ய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.

    ஆகவே தலைமறைவாக உள்ள அன்னலட்சுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன் (வயது 31). இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் சிறையில் இருந்தவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த அன்பழகன் கனகராஜன் மனைவியை சந்திக்க முயற்சித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது அத்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனை வீடு புகுந்து கனகராஜ் மற்றும் அவரது மகன் கணேஷ் ராஜ் ஆகியோர் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்திருந்தனர். இதை தொடர்ந்து கனகராஜின் மகன் கணேஷ் ராஜையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
    • உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).

    இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

    பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி டிரைவர் கொலையில் மற்றொரு சகோதரருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
    • ராஜபாளையம் அருகே ெசாத்து தகராறில் தீர்த்துக்கட்டினர்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் சிவகிரியை ேசர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் முருகன்(வயது40), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தார். லாரி டிரைவரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

    முத்துசாமியின் 2-வது மனைவிக்கு ஞானகுருசாமி, காளிதாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி குடும்பத்தினருக்கும், 2-வது மனைவி குடும்பத்தி னருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன், மகன் மற்றும் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். குழந்தைகள் இருவரும் முன்னே நடந்து செல்ல, பின்னால் அவர்களின் பைகளை சைக்கிளில் வைத்துக் கொண்டு சென்றார்.

    ஜீவா நகர் பகுதியில் சென்றபோது, திடீரென்று 2 பேர் ஓடி வந்து அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறுிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அருகில் இருந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர்.

    அதில் அவர் முத்துசாமியின் 2-வது மனைவியின் மகன் ஞான குருசாமி(38) என்பதும், தனது சகோதரர் காளி தாசுடன் சேர்ந்து அண்ணன் முருகனை கொலை செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காளிதாசை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார்.
    • தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 56). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் செல்லையா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டை விற்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலைமாடசாமி கோவில் வளாகத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார்.

    வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழரசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் பசுபதி (வயது 26). டிரைவர். இவரது மனைவி சண்முகப்பிரியா (25). இவர்களுக்கு வெற்றிவேல் (6), மாறன் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சண்முகப்பிரியாவுக்கும், கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான தமிழரசன் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இதனை அறிந்த பசுபதி, 2 பேரையும் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழரசன், பசுபதியை கத்தியால் குத்தினார். இதனிடையே சண்முகப்பிரியா குழந்தைகளுடன் தமிழரசனுடன் சென்று வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து மகன் மாறன் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறி மகனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தாய் சண்முகப்பிரியா சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது சுயநினைவின்றி மாறன் இருந்ததால் அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தமிழரசனை பிடித்து விசாரித்த போது, சிறுவன் மாறன் இரவு நேரத்தில் அடிக்கடி அழுது வந்துள்ளான். இது அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த தமிழரசன் சிறுவனை சுவற்றில் தூக்கி அடித்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த சிறுவன் மீண்டும் எழுந்திருக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கள்ளக்காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து சிறுவன் கீழே விழுந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளது தெரிய வந்தது.

    இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தான். இதையடுத்து தமிழரசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும், மகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாக கூறி நாடகமாடிய தாய் சண்முகப்பிரியா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார்.
    • இருவரும் சிவமணியை தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

    கடலுார்:

    கடலுார் அருகே குறவன்பாளை யத்தைச்சேர்ந்தவர் சிவமணி, (வயது38). ஆட்டோ டிரைவர். திருமணமாகி, ஆண் குழந்தை உள்ளது. இவர் கிழக்கு ராமாபுரம்-நடுக்குப்பம் சாலை, வாழைத்தோப்பில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். இதுகுறித்து  திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார். இதன் காரணமாக சிவமணியை கொலை செய்ய விதவை பெண், அவரது தம்பி வேல்முருகன், நண்பர் அம்பாள்புரம் சங்கர் ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி, கிழக்கு ராமாபுரம் திரவுபதியம்மன் கோவில் திருவிழாவிற்கு விதவை பெண் அழைத்ததின் பேரில், சிவமணி அங்கு சென்றார். அப்போது, விதவைபெண் , வேல்முருகன், சங்கர் ஆகியோர் சிவமணியை கோவிலுக்கு போகலாம் எனக் கூறி, ஆட்டோவில் அழைத்துச் சென்று கொலை செய்தது தெரிந்தது. விதவை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக 2 பேரை தேடிவந்தனர். அதன்படி என்.எல்.சி., சுரங்கத்தில் கனரக வாகன டிரைவரான வேல்முருகன், பெயிண்டர் சங்கர், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசில் வேல்முருகன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:- என் அக்கா மகளை சிவமணி கர்ப்பமாக்கினார். இதுகுறித்து எனது அக்கா தட்டிக் கேட்டபோது சிவமணிவாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால்சி வமணியை கொலை செய்ய திட்டமிட்டோம். பேச வேண்டும் எனக்கூறி சிவமணியை, விதவை பெண் வாழைத்தோப்பிற்கு அழைத்து வந்தார். அங்கு வந்த நானும், சங்கரும் சேர்ந்து சிவமணியுடன் மது அருந்தினோம். பின், இருவரும் சிவமணியை தாக்கியதில்,அவர் கீழே விழுந்தார். அப்போது, கத்தியால் கழுத்தறுத்து கொலைசெய்தோம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    ×