search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் மோதல்"

    • ரெயில் வந்ததை அறியாத மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது.
    • மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடந்து சென்றார்.

    அப்போது ரெயில் வந்ததை அறியாத அந்த மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது. இதில் மூதாட்டி உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டி வைத்திருந்த பையில் அவரது வங்கி புத்தகம், ஆதார் அட்டை இருந்துள்ளது.

    மேலும், இறந்த மூதாட்டி ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமப்பகுதியைச் சேர்ந்த வெங்கட்டன் மனைவி மூக்கியம்மாள் என்பதும், அவர் அரசு வங்கியில் தனது முதியோர் உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மூக்கியம்மாள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை அருகே ரெயில் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51).ஓட்டல் ஊழியர். நேற்று மாலை இவர் திருமங்கலம்-விமான நிலைய ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    அவரது உடலை ரெயில் என்ஜின் 20 மீட்டர் தூரத்திறகு இழுத்து சென்றது. மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆண்டணி ஜோசப்ராஜ் (வயது 35). இவர் இன்று காலை சிதம்பரம் அருகே கிள்ளை-சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக திருச்ெசந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆண்டணி ஜோசப்ராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • இளம்பெண் பச்சை நிற பேண்ட் ரோஸ் கலர் டாப் சுடிதார் அணிந்திருந்தார். வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
    • இளம்பெண், வாலிபர் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மற்றும் இளம்பெண் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    வாலிபர் மற்றும் இளம்பெண் உடல்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

    இளம்பெண் பச்சை நிற பேண்ட் ரோஸ் கலர் டாப் சுடிதார் அணிந்திருந்தார். வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார்.

    இரு உடல்களும் ரெயில் மோதி சிதறி கிடந்தது. உடல் பாகங்கள் முழுவதும் ரத்தமாக காட்சி அளித்தது.

    அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    அந்த பகுதியில் இளம்பெண், வாலிபர் யாராவது மாயமாகி உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்தார்களா? அல்லது அடித்து கொலை செய்து வீசப்பட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது.
    • ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன.

    கொழும்பு:

    இலங்கையின் மட்டக் களப்பு அருகே ஹபரணை- கல்ஒயா ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றன. அப்போது பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த யானைகள் மீது ரெயில் மோதியது.

    ரெயில் மோதியதில் மூன்று யானைகள் உயிரிழந்தன. யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

    ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் யானைகளின் உடல்கள் மற்றும் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி நடந்தது.

    • ரெயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மோரை தெரு பகுதியில் உள்ள ெரயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லிக்குப்பம் மோரை தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த ஜீவானந்தம் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் மோதி ஒரு யானை பலியானதாக ரெயிலின் கார்டு தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
    • யானை குட்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வயலார் வனபகுதி வழியாக சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை உள்ளது.

    இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடும் என்பதால் ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படும். என்றாலும் அவ்வப்போது வனவிலங்குகள் ரெயிலில் அடிப்பட்டு பலியாவது உண்டு.

    அந்த வகையில் நேற்று காலை இந்த வழியாக சென்ற கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் மோதி ஒரு யானை பலியானதாக ரெயிலின் கார்டு தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வயலார் கோட்டமுட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறினார்.

    உடனே ரெயில்வே அதிகாரிகளும், வனத்துறையினரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சுமார் 20 வயதான யானை ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தது. அதன் அருகே யானை குட்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. குட்டியை வனத்துறையினர் மீட்டு கால்நடை துறை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    • ஆஷிஷ்குமார் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
    • எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அருகே நந்திமங்கலத்தைச் சேர்ந்த முருகன். அவரது மகன் ஆஷிஷ்குமார்(வயது 14) இவர் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் செல்லும் விழுப்புரம் – திருச்சி ரயில் மார்க்கத்தில் இயற்கை உபாதைக்கு ரயில் பாதையை கடந்து சென்று மீண்டும் அவ்வழியே கடந்து வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமை யிலான போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில்பட்டி குமாரபுரம் ரெயில் நிலையம் அருகே ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுகத்திற்கும் மீளாவிட்டானுக்கும் இடையே உள்ள பெரியசாமி நகர் உப்பாற்று ஓடை ரெயில்வே மேம்பாலத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 25) லாரி டிரைவர் என்பதும், இவர் தூத்துக்குடி துறைமுகம் சென்ற சரக்கு ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி குமாரபுரம் ரெயில் நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 54 ) என்பது தெரியவந்தது.

    இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இன்று காலை 6 மணிக்கு வீட்டருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிறிஸ்டோபர் இரவு பணி முடிந்து ரெயில் மூலம் பட்டாபிராம் வந்தார்.
    • அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரெயில் கிறிஸ்டோபர் மீது மோதியது.

    திருநின்றவூர்:

    ஆவடி அடுத்து பட்டாபிராம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது28). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இரவு அவர் பணி முடிந்து ரெயில் மூலம் பட்டாபிராம் வந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரெயில் கிறிஸ்டோபர் மீது மோதியது. இதில் அவர் உடல் துண்டு துண்டாகி பரிதாபமாக பலியானார்.

    தகவல் அறிந்ததும் ஆவடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிறிஸ்டோபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக போலீசார் வரும் வரை தண்டவாளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் உடலை கடந்து அடுத்தடுத்து ரெயில்கள் சென்றது காண்போரை கண்கலங்க செய்தது.

    இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×