search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித நீராடல்"

    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.

    `கற்பகநாதர் குளம்' விநாயக தீர்த்தத்திற்கு `கடிக்குளம்' என்ற பெயரும் உண்டு. எனவே, இத்தலத்திற்கு `கடிக்குளம்' என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும். கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், `கற்பகநாதர் குளம்'என்றும், `கற்பகனார் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து இறைவன் பெயர், `கற்பக நாதர், கற்பகேஸ்வரர்' என்றும், அம்பாள் பெயர், `சௌந்தரநாயகி, பால சௌந்தரி'என்றும் அழைக்கப்படுகிறது.

    மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது. இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய `விநாயக தீர்த்தம்' (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

    ஒருவர் தமது முன்னோரிமன் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப்பூவாக மலர்ந்ததாம். அப்போது தான் தெரிந்தது.

    இந்த தலமும், தீர்த்தமும் முக்தி கரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.

    புனித நீராடல், தானம், தர்ப்பணம்

    ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்ததையும் ஒன்றுபடுத்தியதன் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    • தேங்காய் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலில் சென்று வழிபட்டனர்.

    தஞ்சாவூர்:

    எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி இன்று ஆடி அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆறு, கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமானோர் பச்சரிசி, தேங்காய் காய்கறிகள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகளை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலில் சென்று வழிபட்டனர். இன்று திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தஞ்சையிலும் புதுஆற்று படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    இறந்த மூதாதையர்களுக்கு பச்சரிசி, எள், காய்கறி, பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு ஆகிய பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து, பின்பு ஆற்றில் காதோலை கருகமணி தேங்காய், வெற்றிலைபாக்கு, எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை விட்டு புனித நீராடினர். மேலும் மாடுகளுக்கு அகத்திக் கீரையும் கொடுத்தனர்.

    இந்த ஆடி மாதத்தில் மட்டும் இன்று மற்றும் மாதத்தின் கடைசி நாள் என 2 அமாவாசை வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஐப்பசி மாதத்தில் கடைசி நாளில் காவிரியில் புனித நீராடுவதை கடைமுழுக்கு எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
    • காவிரி ஆற்றில் நீராடி தாம் ஏற்றுக்கொண்டுள்ள பாவங்களை போக்கிக் கொண்டு பாவ நிவர்த்தி அடைவதாகவும் கருதப்படுகிறது.

    திருவையாறு

    காவிரி ஆற்றுக்கு உகந்த துலாம் ராசியின் பெயரில் அமைந்துள்ள துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது துலா ஸ்நானம் எனவும்., இம்மாதக் கடைசி நாளில் காவிரியில் புனித நீராடுவதை கடைமுழுக்கு எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. மேலும், கங்கை, யமுனை மற்றும் பிரம்மபுத்திரா முதலிய புனித நதிகள அகத்திய முனிவர் அறிவுறுத்தியபடி இம்மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடி தாம் ஏற்றுக்கொண்டுள்ள பாவங்களை போக்கிக் கொண்டு பாவ நிவர்த்தி அடைவதாகவும் கருதப்படுகிறது.

    நாளை ஐப்பசி மாதக் கடைசி நாள் என்பதால் காசிக்கு வீசம் கூட என்னும் பெருமையுடைய திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் இதுவரையில் துலாஸ்நானம் செய்யாதவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் தமது பாவங்களை போக்குவதற்காக காவிரியில் புனித நீராடுகிறாரகள்.

    கடைமுழுக்கு நாளில் காவிரி ஆற்றுக்கு வந்து சேர முடியாத முடவர்களுக்கு சிவபெருமான் அருளியவாறு நாளை மறுநாள் முடவன் முழுக்கு நடக்கிறது.

    கடைமுழுக்கை முன்னிட்டு திருவையாறு கடை வீதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பனிக்கரும்புகளை புனித நீராடிச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரசாதமாக கருதி விலைக்கு வாங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது.

    • ராமேசுவரம் கோவிலில் சூரியகிரகண சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதைத்தொடர்ந்து சுவாமி அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. 6 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

    அதன் பின்னர் கோயில் நடைகள் 1 மணிக்கு சாத்தப்பட்டன. மாலை 3 மணி அளவில் கோவில் நடைகள் திறக்கப்பட்டது. ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சூரிய கிரகணத்தை யொட்டி கோவிலில் இருந்து சாமி புறப்படாகி அக்னி தீர்த்த கடற்கரையை வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு கிரகண தீர்த்தவாரி நடைபெற்றது.

    கோவில் குருக்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்தார். இதைத்தொடர்ந்து சுவாமி அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட சாமி கோவிலை சுற்றி 4 ரத வீதியில் வலம் வந்து இரவு 7 மணியளவில் கோவிலை வந்தடைந்தார்.

    இதனை தொடர்ந்து கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு அர்த்த சாம பூஜை நடைபெற்று கோவில் நடைகள் அடைக்கப்பட்டது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோவிலி ல் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    • யார் அவர்? என போலீஸ் விசாரணை
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    கன்னியாகுமரி:

    ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்து குவிய தொடங்கினார்கள்.

    இதனால் கன்னியாகுமரி யில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்த நிலையில்கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் "திடீர்"என்று மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராட வந்த பக்தரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×