என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரம்மகுமாரி"
- அமாவாசை தினத்தன்று பக்தர்களிடம் தனது இயக்கம் குறித்து விளக்கப் பாடம் நடத்துவது வழக்கம்.
- இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் பிரச்சாரம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவினாசி :
பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய விஸ்வ வித்யாலயம் எனும் இயக்கம் ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு 185 நாடுகளில் இயங்கிவருகிறது. அவினாசி கிளை பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் பிரதிமாதம் அமாவாசை தினத்தன்று அவினாசிலிங்கேசுவரர் கோவில் கலை அரங்கில் தனது இயக்கம் குறித்து பக்தர்களிடம் விளக்கப் பாடம் நடத்துவது வழக்கம்.
ஆடி அமாவாசை தினமான நேற்று இவர்கள் கலை அரங்கில் வழக்கம்போல் பிரசங்கம் செய்துகொண்டிருந்தனர். அப்போது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் வந்து நீங்கள் யார் கிருஷ்துவ மதத்தை சேர்ந்தவர்களா இங்கு நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் தங்களது பிரசங்கம் செய்வது குறித்து கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.