search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டர் அவதார பதி"

    • 7-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி அன்று நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.

    கலிவேட்டை

    8-ம் திருவிழாவான இன்று காலையில் உகப்படிப்பு, பணிவிடை, பால் அன்னதர்மம் மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலையில் உகப்படிப்பு, பணிவிடையும் தொடர்ந்து அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கடலில் கலி வேட்டையாடுதல் நடக்கிறது. ஒன்பதாம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) மாலையில் அய்யா வைகுண்டர் ஆஞ்சநேயர் வாகன பவனியும், நாளை மறுநாள் 31 -ந் தேதி பத்தாம் திருவிழா மாலையில் இந்திர வாகன பவனியும் நடக்கிறது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி அன்று நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். அன்று நள்ளிரவு ஒரு மணிக்கு அய்யா வைகுண்டர் காளை வாகனபவனி நடக்கிறது.

    நேற்று நடைபெற்ற கருட வாகன பவனியில் அய்யாவழி அகிலத் திருக் குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத் தலைவர் அய்யாபழம், இணைத்தலைவர் விஜயகுமார், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின் நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்,, உறுப்பினர்கள் ஜோதிலிங்கம், ஆனந்த், ஆதவன், கணேசன், செல்வராஜ், அழகேசன், பாலகிருஷ்ணன், கணேஷ், கண்ணன், வினோத், கொட்டங்காடு குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×