search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    • போலீசுக்கு பயந்து ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே நிலையத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா போதை பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டை தனிப்படை ெரயில்வே போலீசார் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தினமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் கடத்தி வரும் கஞ்சா பான் மசாலா மற்றும் குட்காவை ெரயிலில் கடத்தி வருவதும் ெரயில்வே தனிப்படை போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடர்ந்து வரும் நிலையில் வழக்கம்போல இன்றும் ரெயில்வே தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    போலீசார் சோதனையில் ஈடுபட்டதை கண்டதும் போலீசாருக்கு பயந்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை ரெயில் நிலையத்திற்கு அருகாமையில் கொட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் போலீசார்,மரக்காணம் சாலையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜன், என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    அவரிடம் இருந்த 20,000 மதிப்பிலான குட்கா ஹான்ஸ் பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாசன் இன்று இரவு மரக்காணம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். புதுவைநோக்கி வந்த (omni)காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பொருளை கடத்தி வந்த கோவடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவில் இளைஞர்கள் அதிக அளவில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
    • 4 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருள் அல்லது மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. ஆந்திர மாநில எல்லை வழியாக அதிக அளவில் கஞ்சா கடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லைகளில் கஞ்சா கடத்தல் தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில் மற்றும் பஸ்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க ஆந்திராவில் கஞ்சா மது போன்றவற்றிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன.

    ஆந்திராவில் இளைஞர்கள் அதிக அளவில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் போதைக்கு அடிமையான 571 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    அதிகளவு போதைப் பொருட்களை பயன்படுத்தும்போது அவர்கள் நோய்வாய்ப்படுவதும் மற்றும் குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டும் விலை மதிக்க முடியாத உயிரை தற்கொலை மூலம் விட்டு செல்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஆந்திராவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மாநில அரசு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ஆந்திரா-ஒடிசா எல்லைக்கு அருகில் உள்ள 10 மண்டலங்களில் 973 கிராமங்களில் கஞ்சா பயிரிடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அதை அழித்துள்ளனர்.

    ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தனேதி வனிதா இதுகுறித்து சட்டசபையில் தகவல் வெளியிட்டுள்ளார்.

    ஆந்திர பிரதேசத்தில் தற்கொலைகளைத் தடுக்க பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

    4 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருள் அல்லது மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேரணியில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்றதாக அவர் கூறினார். பிற மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனையை தீர்க்க ஒடிசாவுடன் மாநில அரசு கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சு
    • பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் பழக்க த்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி கள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து தற்போது கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் கொரியர் மூலமாகவும் ரெயில் மூலமாகவும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பொருட்கள் குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

    இதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிர சாத் நடவடிக்கை மேற்கொண்டார். கஞ்சா மற்றும் குட்கா புகையிலை குறித்து தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட போலீஸ் சார்பில் வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

    7010363173 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்து உள்ளார்.

    இது தொடர்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விழிப்பு ணர்வு பேனர்களும் வழங்க ப்பட்டு உள்ளது. நாகர்கோ வில் பொன்ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாணவ மாணவிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். சைபர் குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டும்.

    செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஒரு வழி பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரே மோட்டார் சைக்கிளில் 3 செல்லக் கூடாது. அதிவேக மாக சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணிவதன் மூலம் உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.போதை பொருட்கள்விற்பனை குறித்து தெரிந்தால் உடனடி யாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதை இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டத்தை மாற்ற மாணவ-மாணவி களின் பங்கு முக்கியமானது ஆகும். அதற்கு நீங்கள் அனை வரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர்.
    • விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி சோதனை சாவடி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்படுவதாக பர்கூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மைசூர் தோஸ்த்து வாகத்தில் இருந்து சோளம்லோடு ஏற்றி கொண்டு ஒரு சரக்கு வாகனம் வந்தது.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாகனத்தில் தடை செய்ய ப்பட்ட பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ஆன்ஸ் 35 மூட்டை, விமல் பாக்கு 15 மூட்டை, வி.ஐ. டோபோகோ 3 மூட்டை, ஆர்.எம்.டி. 2 பாக்ஸ் உள்பட போதை பொருட்கள், சரக்கு வாகனம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் பவானி அந்தியூர் பிரிவு பகுதி சேர்ந்த அருண் (36), மற்றும் கொள்ளேகால் மாவட்டம் சாம்ராஜ்நகர் ராமாபுரம் கோபிசெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) ஆகிய பேரையும் போலீசார் கைது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலை, பைக் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கியது

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா சென்னச முத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாகதிருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தர வின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார்சென்னசமுத்திரம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்தப் பகு தியை சேர்ந்த ராஜன் ( வயது 37 ) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு சுமார் ரூ.37 ஆயிரத்து 800 மதிப்பிலான தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தி ருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து ராஜனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் திருப்பத்தூர் தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் இருந்த ஒரு கடையில் சோதனை செய்தபோது அங்கு ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    அதனை பறிமுதல் செய்து வாலிபரை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரி கைது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் கோட்டை மூலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வியாபாரியை மடக்கி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது.

    விசாரணையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல்செய்தனர்.

    இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். 

    • கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்தியூர்-பிரம்மதேசம் பிரிவில் உள்ள கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 7 கிலோ எடையில் உள்ள 714 பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    போலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன்(34) கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பெரிய வந்தது.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 7 கிலோ எடையுள்ள 714 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.9,000 ஆகும்.

    • திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
    • விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு கிடைத்து தகவலின் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் சோதனை செய்த போது அவரிடம் தடை செய்யப்பட்ட போதை, புகையிலை மற்றும் பாக்குகள் ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதை விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருச்சியில் இன்று போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • போதைப்பொருள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப் பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெகடர் அலுவலகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புடன், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப் பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும்.

    இதனை நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களிடத்திலும் மக்களிடத்திலும் எடுத்துக் கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ்ந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுகிறேன் என்று பேசினார்.

    இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, அன்பு, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், கோட்டாட்சியர் தவச்செல்வம், உதவி ஆணையர் (கலால்) ரெங்ஙசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, கோட்டத்தலைவர் ஜெயநிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த விழிப்புணர்வு மாரத்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    • முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதை பொருட்கள், addiction materials

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான உறுமொழியை ஏற்றனர்.

    அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ராஜ்குமார் தலைமையிலும் மற்ற ஏனைய ஆசிரியர்கள் உட்பட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×