search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து கட்சி கூட்டம்"

    • கூட்டணி கட்சி என்ற ரீதியில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
    • சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன. ஆனால் தமிழகத்தல் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறுகிறது.

    தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளுமா? புறக்கணிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் கூட்டணி கட்சி என்ற ரீதியில் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக செல்வ பெருந்தகையிடம் கேட்ட போது, முதல்வர் அழைத்துள்ளார். கலந்து கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸ் ஆதரிக்கிறதே என்கிறீர்கள். இதுவும் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான்.

    கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளதோ அதுவே எங்கள் நிலைப்பாடும். எனவே கூட்டத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.

    இதேபோல் அகில இந்திய அளவில் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கிறது.

    இது தொடர்பாக மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் கேட்ட போது, நாங்கள் கலந்து கொள்கிறோம். கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என்றார்.

    • ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.
    • அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த கூட்டம் தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஒ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளார். அவரது தரப்பில் கோவை செல்வராஜ் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    • ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
    • தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க. சார்பில் பங்கேற்க யாருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் அழைக்கும் அணிதான் அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.க.வாக கருதப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்துக்கு எடப்பாடி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அழைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ×