என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு கடை"

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை போலீசார் அறிவுறுத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் சுகவனம் பேசுகையில் குழந்தை தொழிலாளர்களை கடையில் ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசுகள் தீப்பற்றாத கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள உரிமம் பெற்ற தொழிற்சாலையில் இருந்து பட்டாசுகளை வாங்க வேண்டும். பட்டாசு இருப்பு விவரங்களை அதிகாரிகள் கேட்கும் போது பதிவுகளை காண்பிக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியா பாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
    • அதன்படி 68 இடங்களில் தற்காலிக பட்டாசு க்கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியா பாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தீயணைப்புத்துறை ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆன்லைனில் ஏராளமானோர் விண்ண ப்பம் செய்திருந்தனர். இதனை ஆய்வு செய்ய தீயணைப்புத் துறையின ருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தர விட்டனர். அதன்படி தீயணைப்புத் துறையினர் சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    போதுமான இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்ட அவர்கள் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்த னர். அதன்படி 68 இடங்க ளில் தற்காலிக பட்டாசு க்கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    • பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் இரும்பாலை பகுதி என மொத்தம் 143 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கும் 3½ இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    விபத்து இல்லாமல் மாசற்ற வகையில் தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். அரசின் அறிவுறுத்தல் படி அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது.
    • நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது.

    தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாசு கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினா். தீ மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது.

    கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ராஜேந்திரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில், நவ.11-

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படு கிறது. இதையடுத்து புத்தா டைகள் எடுப்பதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் குவிந்திருந்தனர்.

    இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது. மீனாட்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வடசேரி, செட்டிகுளம் உள்பட நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். நாகர்கோவில் நகரில் கூட்டம் அலைமோதியதை யடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    வடசேரி, வேப்பமூடு, செட்டிகுளம் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடு பட்டனர். ஜவுளி கடைகளில் மட்டுமின்றி பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனைக்கு வந்திருந்த விதவிதமான பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலை யங்களிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. இதையடுத்து கடை வீதிகளிலும் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் கை வரிசை காட்டக்கூடும் என்ப தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கு மாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்.

    கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், குழித்துறை, பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி வெளியூர்களி லிருந்து சொந்த ஊருக்கு பஸ்களில் வந்த பொது மக்கள் அதிகமானோர் அதிகாலையில் பஸ்களை விட்டு இறங்கி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    லக்னோ:

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துகளும் ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோபால்பக் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 26 பட்டாசு கடைகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் 9 பேரின் நிலையை கவலைக்கிடமாக உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக வழக்கு.
    • சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவு.

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின்போது, காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம் என்றும் அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார்.

    • மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.
    • விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பத்திருந்தனர். அதில் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர். கடை அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்றும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர்.

    ஆய்வுக்கு பின் மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 84 பேருக்கு மாநகராட்சியில் இருந்து தடையின்மை சான்று பெற்று வழங்கியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 26 பேருக்கு தடையின்மை சான்று கிடைத்த உடன் அனுமதிக்கப்படும். இதேபோல் திருப்பூர் புறநகர் பகுதிகளில் 132 பேரில் 128 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை.
    • ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்காக 6109 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5783 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 326 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய் துறையிடம் இருந்து பட்டாசு கடை திறப்பதற்கு உரிமம் பெற முடியும்.

    பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீயணைப்பு துறை இயக்குனர்கள் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் கட்டாயம் வழி இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய உரிமம் கேட்பவர்கள் தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தரை தளத்தில் மட்டுமே பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும் படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைக்கக்கூடாது.

    அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது. மேலும் அந்த அறை 25 சதுர மீட்டருக்கும் அதிகமான சுற்றளவில் இருக்கக்கூடாது.

    ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளை விற்பனை செய்யக்கூடாது. 'இங்கு புகை பிடிக்கக்கூடாது' என்பது உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    அலங்கார மின் விளக்குகளை தொங்கவிடக்கூடாது. உரிமம் பெற்ற கட்டிடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக்கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது.

    பட்டாசு கடையின் அருகே தீயணைப்பு துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசு கடையில் குறைந்த பட்சம் 2 தீயணைப்பு கருவிகள், 2 லாரிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    தணிக்கை செய்வதற்காக அதிகாரிகள் வரும்போது பட்டாசு கடையின் உரிமத்தை அவர்களின் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கை பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இதுபோல மொத்தம் 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி மற்றும் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.
    • வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு கடை அமைக்க வியா பாரிகள் உரிய அனுமதியை பெற தேவை யான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு கடை அமைக்க அனுமதிப்பது குறித்து தீயணைப்பு, போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    கடந்த மாதம் 30-ந் தேதி பட்டாசு கடை வைக்க அனுமதி கேட்போர் விண்ணப்பிக்க கால அவகாசம் வருவாய் துறை யினரால் அளிக்கப்பட்டு இருந்தது. பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.

    விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளது. அந்தந்த தீய ணைப்பு நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்றினை நிலைய தீயணைப்பு அலுவலர்கள் முழுமையான ஆய்வுக்கு பின் வழங்குவர்.

    குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்துவர். தடையின்மை சான்று கோரி தினமும் விண்ண ப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை உடனு க்குடன் அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது நிலைய தீயணைப்பு அலுவலர்களுக்கே நன்கு தெரியும். எனவே விதிமுறை களை பின்பற்றியே தடை யின்மை சான்று வழங்குவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களை தவிர்த்து தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை, பொது சேவை மையங்களில் இணையதளம்வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்து டன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட உரிமை ஆவணங்கள், உரிமக் கட்டணமாக செலுத்தப்பட்ட செலுத்துச்சீட்டு (சலான் அசல்), விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை , பான் அட்டை , ஸ்மார்ட் குடும்ப அட்டை), உள்ளாட்சி அமைப்பில் கட்டிடம், வீட்டு வரி ரசீது, விண்ணப்ப தாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கவேண்டும் . விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    எனவே தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொது மக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வைஷ்னவி நகர் பிரதான சாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், இந்த பகுதியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையும், உள்ளது. இவர் வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று இங்கு வந்து கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்ட உரிமம் என்றால் சுமார் 1500 கிலோ வரை இருப்பு வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகைமூட்டமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பார்த்து உடனடியாக ஓசூர் மாநகராட்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் எரிந்து கொண்டிருந்த பட்டாசு கடையை சுற்றிலும் அதிகமான குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், தனியார் மருத்துவமனை என அமைந்துள்ளது.

    இந்த பகுதி எப்போதும் அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக உள்ளது. இந்த தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.

    பட்டாசு கடை உரிமையாளர் வந்த பிறகு தான் வெடித்து சிதறிய பட்டாசுகளின் முழுமையான மதிப்பு தெரியவரும். இருப்பினும், சேதமதிப்பு பல லட்ச ரூபாய் அளவில் இருக்கும் என தெரிகிறது.

    முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த விபத்து காரணமாக ஓசூர் டி.எஸ்.பி. அரவிந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு இருபுறமும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களை அனுமதிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக, அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    ×