search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"

    • விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
    • சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம்:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர்.

    வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் உள்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் மேலும் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் பாஸ்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.

    விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் எடுத்து வரும் கைப்பைகளை 'ஸ்கேனிங்' மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பல கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றன.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் 3½ மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

    சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடியை ஏற்றினார்.
    • ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75-வது சுதந்திரதின விழா இன்று காலை நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய 179 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்ப ட்டது. மேலும் 3 பயனாளி களுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சுதந்திர தின தியாகிகளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், சமூக சேகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், அவரது அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ், யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர், வட்டார அலுவலகத்தில் சாந்தி போத்திராஜ், நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் கொடியேற்றி வைத்தனர்.

    நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைத்த லைவர் தனலட்சுமி, கமி ஷனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நீதிபதிகள் சிந்துமதி, கவிதா, ராஜ்குமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடியே ஏற்றி 75-வது சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    • தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கவிதா ராமு, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
    • 101 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரத்து 26 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு வருகை தந்த கலெக்டர் கவிதா ராமுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வரவேற்றார்.

    இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கவிதா ராமு, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தீயணைப்பு மீட்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 609 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலன், சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரத்து 26 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சமி தமிழ்செல்வன், மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட திட்ட அலுவலர் கருப்பசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், ஆர்.டி.ஓ. (பொ) கருணாகரன், புதுக்கோட்டை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றினார்.
    • தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று (15.8.2022) நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 84 பயனாளிகளுக்கு ரூ.26,41,830 மதிப்பிலான நலதிட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 115 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்மணி , மாவட்ட வருவாய் அலுவலர்அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

    தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.

    இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    விழாவில்பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவனின் யோகா நிகழ்ச்சி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், கவுதம புத்தர் சிறப்பு பள்ளியைச் சார்ந்த 10 மாணவர்கள், சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 50 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழச்சிகள் நடைபெற்றது.

    • 75-வது சுதந்திர தின விழாவில் ரூ.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வழங்கினார்.
    • அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு இன்று காலை கோலாகலமாக நடந்தது. ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து மூவர்ண பலூன் பறக்க விட்டு, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாக்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    காவல்துறையை சேர்ந்த 45 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுக்கான நற்சான்றிதழ் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்பட 11 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 158 அலுவலர்களுக்கும், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரியம், கலை பண்பாட்டுத் துறைகளின் சார்பில் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரங்கள், சலவைப்பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 81 ஆயிரத்து 451 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    மாணவ- மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது.
    • 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அதன்படி திருப்பூர் மாநகர போலீசில் பணியாற்றும் 53 பேருக்கும் மாவட்ட போலீசில் பணியாற்றும் 40 பேருக்கும், தீயணைப்பு வீரர்கள் 10 பேர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள், வேளாண் துறை, மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனைபட்டா, தாட்கோ திட்டத்தின் மூலம் சுற்றுலா வாகனம், பயணிகள் ஆட்டோ, சரக்கு வாகனம், மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை கமிஷனர்கள் வனிதா, அபினவ் குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

    சுதந்திர தினவிழா

    கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணி யாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி மற்றும் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடை பெற்றது.

    1200 போலீசார்

    சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத் தில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் பிளாட்பா ரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ெரயில்வே தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ெரயில்வே பாலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள். பார்சல் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.

    கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ெரயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 20-ந்தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்.

    ஆலந்தூர் :

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனையிடுகின்றனா்.

    வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணிக்கின்றனா். விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் நீண்டநேரமாக நிற்கும் கார்ளை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனா்.

    சென்னை விமான நிலையத்தில் பார்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால் அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா்.

    விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவி துருவி சோதனை செய்கின்றனா்.

    பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பார்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்கு பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணிநேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் 3½ மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

    சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்.

    தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 75-வது இந்திய சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர்தலைமையில் நடைபெற்றது.
    • விழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், சுதந்திர போராட்ட தியாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விழாவிற்கு அழைத்தல் தொடர்பாக அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    தேனி:

    75-வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    75-வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், சுதந்திர போராட்ட தியாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விழாவிற்கு அழைத்தல் தொடர்பாக அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக தயார்படுத்துதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு உரிய மரியாதை செலுத்துதல்,

    பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்தல், சிறப்பாக பணியாற்றக் கூடிய அலுவலர்கள், பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவதற்கான பட்டியல்களை தயார் செய்தல் போன்ற பணிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ள அட்டவ ணைப்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, தேசிய சமூக நலப்பணி படை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செய்தல், விழா நடைபெறும் இடத்தில் போதுமான அளவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், மேலும், சுதந்திர தின விழாப்பணிகளை வருவாய்த்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அனைத்து த்துறை அலுவல ர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

    • பெங்களூருவில் 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்த முடிவு.
    • 75-வது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    75-வது சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நான் பெங்களூருவில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. இல்லாத தொகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து இந்த நடைபயணம் குறித்து கலந்துரையாடி வருகிறேன்.

    மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். வார்டு மறுவரையறை தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சபேனைகள் வந்தன. அந்த ஆட்சேபனைகளை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை.

    பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊர்வலம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஜனநாயகம் இருந்திருக்காவிட்டால் குமாரசாமி, எடியூரப்பா போன்றோர் முதல்-மந்திரி பதவிக்கு வந்திருக்க முடியாது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி.மாணவர்கள் ஆகியோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

    கொரோனா காரண–மாக, கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சுதந்திர தினத்தை–யொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் விழாவுக்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.வருகிற 13-ந் தேதி வ.உ.சி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

    சுதந்திர தினத்தன்று மாநகரில் 2 ஆயிரம் போ–லீசாரும், புறநகர் பகுதிகளில் ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

    ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து பிளாட்பாரங்களிலும் சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களும் ஸ்கேன் செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
    • இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவாக வெளியிடப்பட்டவை ஆகும்.

    சென்னை :

    சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

    இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையுடன், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இணைத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா அன்று தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும்.

    * கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ (விர்ச்சுவல் பார்மெட்) தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம்.

    * நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    * தேசிய போர் நினைவிடம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவாக வெளியிடப்பட்டவை ஆகும்.

    ×