என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒகேனக்கல் அருவி"
- கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
- நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் உபரி நீரானது 38,315 கன அடி உபரி நீர் வெளியேற்றப் பட்டது
இதனால் தருமபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 60ஆயிரம் கன அடியாக குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 55 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிக அளவில் வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 22-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.
- கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்ந்தது.
பென்னாகரம்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று 5603 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு இன்று நீர்வரத்து 4479 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100.72 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து இன்று 3603 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதேபோன்று கபினி அணைக்கும் நீர்வரத்து வரதொடங்கியதால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1008 கனஅடியாக அதிகரித்தது. 2284 அடி உயரம் கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2276.35 அடியாக காணப்பட்டது. அணையில் இருந்து இன்று 2000 கன அடி அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5603 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடாக மாநில எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களாக 1500 கனஅடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்ந்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை காலை தமிழகத்திற்கு வந்தடையும். அப்போது ஒகேனக்கல்லின் நீர்வரத்து மேலும் அதிரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவே தொடர்ந்து நீடித்தது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இந்த இரு அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவே தொடர்ந்து நீடித்தது.
இந்த நிலையில் தற்போது கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 11 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 8,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 9-வது நாளாக நீடித்தது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதையும் பார்த்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் இன்று காலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,776 கனஅடியும், கபினியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி என மொத்தம் 17,776 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று மாலை 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதையும் பார்த்தனர்.
மேலும் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்கின்றனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.
இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
- தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து ள்ளது.
இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
- மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது. மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு களித்தனர்.
இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் மீன் வியாபாரம் விற்பனை களை கட்டியது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
- தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணரா ஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.
மேலும் அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 9,500 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 9,500 கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 9,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.