என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குருணை மருந்து"
- திருவெண்ணைநல்லூர் அருகே குருணை மருந்து குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
விழுப்புரம் :
திருவெண்ணைநல்லூர் அருகே கடுத்தாட்கொண்டூர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மனைவி ஜெயந்தி (வயது 38). இவருக்கு முன்னதாகவே தீராத வயிற்று வலி இருந்தது. நேற்று ஜெயந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மன உளைச்சலில் இருந்த ஜெயந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குருணை மருந்து எடுத்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜெயந்தி இறந்தார்.
இதுகுறித்து திரு வெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெ க்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று திருவெண்ணை நல்லூர் அருகே கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24) இவர் விழுப்புரம் ஸ்ரீராம் பைனான்சில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவருக்கும் வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வெங்கடேசன் இறந்தார். இதுகுறித்து வெங்க டேசன் மனைவி சத்யா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.