search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம் உயர்வு"

    • 3-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 877.30 மீட்ட ராக உள்ளது.
    • கடந்த சில நாட்களில் 10 கோடியே 6 லட்சம் லிட்டர் வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது

    கோவை,

    கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. அங்கு இருந்து மாநகரில் உள்ள 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 878.50 மீட்டர் கொள்ளளவு கொண்ட அணையில் கடந்த வாரம் 876.70 மீட்டர் அளவுக்கு தண்ணீர் இருந்தது.

    இந்த நிலையில், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    3-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 877.30 மீட்ட ராக உள்ளது. இன்னும் 1.20 மீட்டர் உயரம் நீர்மட்டம் உயர்ந்தால் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டும்.

    இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    அணையில் இருந்து கடந்த சில நாட்களில் 10 கோடியே 6 லட்சம் லிட்டர் வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 11 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்க ப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • நீர்மட்டம் 43 அடி உயர்வினால் கோமுகி அணையில் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது.
    • விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணை மொத்த கொள்ளளவு 46 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசனமும் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது இதனால் அணையில் வெறும் 15 அடி மட்டும் தண்ணீரை நிலத்தடி நீர்மட்டம் ஊறுவதற்காக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தை மழை பெய்தது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள கல்படை, மல்லிகைப்பாடி, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கண்ணாடி வரை நீர் வரத்து வந்ததால் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. தற்போது நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் வெகு விரைவில் அணையில் இருந்து த ண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • தியாகதுருகம் அருகே பெரிய ஏரியில் தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவிலான நிலத்திற்கு தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. இந்த ஏரியில் மீன் வளர்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. அதன்படி குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பல்லகச்சேரி ஏரியிலிருந்து பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்த–தால் மீன் பிடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

    எனவே ஏரி கரையில் தற்போது உள்ள ஒரு மதுவில் தண்ணீரை திறந்து விட்டும், மற்றொரு இடத்தில் புதியதாக மது கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் வழியாக இரவு நேரங்களில் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றியும் மீன்களை பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு மீன்பிடிப்பதற்க்காக தண்ணீர் திறந்து விடுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படும் எனவும். மேலும் இவ்வாறு வெளி–யேறும் தண்ணீர் தற்போது கரும்பு பயிர்களில் தேங்கி கிடப்பதால் கரும்பு பயிர் வீணாகும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்க தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×