என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ்"
- கே.எஸ்.அழகிரி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
- பதவிகளை பெற இப்போதே கடும் போட்டி நிலவுகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிறது. வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.
கே.எஸ்.அழகிரி தலைமையில் ஒரு சட்டமன்ற தேர்தல், ஒரு பாராளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களை காங்கிரஸ் சந்தித்தது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதனால் தலைவர் மாற்றம் பற்றி டெல்லி மேலிடம் பரிசீலிக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகள் ஆவதால் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகம் உள்பட 4 மாநில தலைவர்கள் மாற்றம் மற்றும் அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் நியமனததை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடிக்க காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய தலைவரை நியமிக்கும் போது கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு இணக்கமாக செல்லக் கூடியவரே நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இப்போது டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதி மணி எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் உள்பட சிலர் பதவிகளை பெற காய் நகர்த்தி வருகிறார்கள். இவர்களில் யாரை நியமிக்கலாம் என்று கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. யாரை பற்றியும் இன்னும் இறுதி முடிவு எடுக்காததால்தான் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கே.எஸ்.அழகிரி இன்று மாலை டெல்லி செல்கிறார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அழகிரியின் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்து விடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
பதவி நீட்டித்தாலும் சரி, புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும் சரி 5 செயல் தலைவர்கள், மாநில பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்த பதவிகளை பெற இப்போதே கடும் போட்டி நிலவுகிறது.
- முக்கிய விசேஷம் ஒவ்வொருவருக்கும் டெல்லியில் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
- தலைவர் பதவிக்கு குறி வைத்து தமிழக காங்கிரஸ் பெருந்தலைகள் டெல்லியை சுற்றி கொண்டிருக்கின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. ராகுலும் அமெரிக்காவில் இருந்து திரும்பிவிட்டதால் நிர்வாகிகள் நியமனம் உடனடியாக தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் தலைவர் பதவிக்கு குறி வைத்து தமிழக காங்கிரஸ் பெருந்தலைகள் டெல்லியை சுற்றி கொண்டிருக்கின்றன.
டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதிமணி எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், கார்த்தி ப.சிதம்பரம் என்று பலர் பதவி பெறும் போட்டியில் தீவிரமாக இருக்கிறார்கள்.
இதில் முக்கிய விசேஷம் ஒவ்வொருவருக்கும் டெல்லியில் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். அவர்களின் செல்வாக்கு தான் தமிழக தலைவரை தேர்வு செய்வதில் அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள்.
காங்கிரசில் பதவி பெற கீழ்மட்டத்தில் மட்டுமல்ல. மேல்மட்டத்திலும் அப்படித்தான்.
- தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
- தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன்.
அரசியலில் இருப்பவர்களுக்கு தலைவராக வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் முதல்வராக கூட ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். இதில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுவாரா என்ன?
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு ஒருபக்கம் அடிபடுகிறது. இன்னொரு பக்கம் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை புதிய தலைவருக்கு வாய்ப்பு இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.
இது பற்றி திருநாவுக்கரசர் கூறும்போது, "அழகிரி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே அவர் மாற்றப்படலாம். அல்லது அவரே தலைவராகவும் தொடரலாம். எதுவாக இருந்தாலும் டெல்லி தலைமைதான் முடிவு செய்யும். அதே நேரம் இங்குள்ள முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தலா 2 முறை மாநில தலைவராக இருந்துள்ளார்கள்.
நான் ஒருமுறைதான் இருந்திருக்கிறேன். எனவே எனக்கு மீண்டும் கட்சி தலைவர் பதவி கொடுத்தால் உண்மையாக பணியாற்ற தயாராக இருக்கிறேன். தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன். துணை சபாநாயகராக பொறுப்பு வகித்துள்ளேன். அமைச்சராக 10 வருடம் பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது. நான் 30 வயதில் இருக்கும் போதே எனது துறையின் கீழ் 30 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியாற்றினார்கள். மத்திய மந்திரியாகவும் இருந்திருக்கிறேன். 50 வருட அரசியல் அனுபவம் இருந்திருக்கிறது. எனவே முதல்வர் ஆகும் தகுதி கூட எனக்கு உண்டு என்பதை நான் நம்புகிறேன். ஆனால் காங்கிரசில் இருந்து கொண்டு அப்படி ஒரு கனவு காண முடியாது என்கிற யதார்த்தமும் தனக்கு தெரியும்" என்றார் ஆதங்கத்துடன்.
- மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
- கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தி தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நாளை வேப்பேரியில் உள்ள ஓம்.எம்.இ.ஏ. மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் 680 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.
மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
- மாநில வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வாக்காளருக்கும் ‘கியூ ஆர்.’ கோடுடன் வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும்.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். தலைவருக்கான தேர்தலில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.
மாநில வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் 'கியூ ஆர்.' கோடுடன் வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியான மதுசூதன் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் வருகிற 20-ந்தேதிக்குள் மாநில அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி மாநில தலைவர்கள், மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றி டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் 9300 பேர் வாக்களிப்பாளர்கள். அவர்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். இதற்காக மாநில வாரியாக தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் சோனியா ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள். எனவே தலைவர் தேர்தலிலும் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களோ அல்லது அவர்களது ஆதரவாளர்ளோ தான் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதேபோல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் 23 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும் அவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 11 பேர் நியமிக்கப்படுவார்கள்.
இந்த 12 உறுப்பினர்கள் தேர்வுக்கு கூடுதலாக ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தாலும் தேர்தல் நடைபெறும்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே ஆதரவாக இருக்கிறார்கள். எனவே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் வரவில்லை. எனவே யாரும் வாக்கு பதிவுக்கு ஆர்வம் காட்டுவதும் இல்லை. தேர்தலில் போட்டியிடவும் தயாராவதில்லை.
ஆனால் இந்த முறை இதுவரை ராகுல் போட்டியிடுவது பற்றி அறிவிக்கவில்லை. சசிதரூர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் தான் வாக்குப்பதிவு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சுமார் 800 பேர் வாக்காளர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி (திங்கள்) மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மாநில தலைவர் ஆகியோரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானம் உடனடியாக டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.
- தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம்.
- ஆகஸ்ட் 9 முதல் 14 வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ள முடிவு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூறுகிற வகையில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்த இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுகின்ற வகையிலும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துகளை கூறி, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்