search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The price of flowers has gone up. பூக்களின்"

    • வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • நாளை ஆடி- 18 பண்டிகை வருவதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், அண்ணா நகர் ,சின்ன மருதூர் ,பெரிய மருதூர், தண்ணீர் பந்தல், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி, அரளி ,செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை வாங்கி செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை வாங்கி செல்கின்றனர். ஏலம் எடுத்த உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும் ,தோரணங்களாலும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் உதிரிப்பூக்களைபிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளுர் பகுதிகளுக்கு கொண்டு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லிகை பூ

    ரூ.300- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.120- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.230-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைவானதாலும், நாளை ஆடி- 18 பண்டிகை வருவதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×