என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உயர்மட்டப்பாலம்"
- கண்டமங்கலம் அருகே மலட்டாற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் கட்டும் பணி அமைச்சர் பொன்முடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
- ஏரி மற்றும் குளங்களுக்கு சென்று நீர் ஆதாரம் சேமிக்கப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், வடவாம்பலம்- ஜெகநாதபுரம் சாலை மலட்டாற்றின் குறுக்கே மற்றும் ரங்கா ரெட்டிபாளையம் சாலை மலட்டாற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ. க்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடி தலைமைதாங்கி 2 உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நகரப்பகுதிகளை போன்றே கிராமப்புறங்களிலும் சாலை வசதி மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்திட வேண்டும் என உத்தர விட்டிருந்தார்கள். இதன் மூலம், அப்பகுதியினை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்திடலாம் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், விவசாயத் தொழிலும் வளர்ச்சி பெறும். மேலும், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எளிதில் பயணம் மேற்கொள்ள முடியும். முக்கியமாக மழைக்காலங்களில் உருவாகும் வெள்ளநீர் கிராமப்பகுதிகளில் சூழாமல் உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று உரிய ஏரி மற்றும் குளங்களுக்கு சென்று நீர் ஆதாரம் சேமிக்கப்படும்.
அதனடிப்படையில், இன்று நபார்டு நிதியுதவி திட்டத்தின்கீழ், வடவாம்பலம்- ஜெகநாதபுரம் சாலை மலட்டாற்றின் குறுக்கே ரூ.3.39 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் ரங்காரெட்டிபாளையம் சாலை மலட்டாற்றின் குறுக்கே ரூ.6.65 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் 2 உயர்மட்டப்பாலம் கட்டு வதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற் ெபாறியாளர் வெண்ணிலா, கண்ட மங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் குகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்