என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி பலாத்காரம்"
- வாலிபர் போக்சோவில் கைது
- வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பொள்ளாச்சி :
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் பொள்ளாச்சி எஸ்.புரவி பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கபில்தேவ் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம்.
இந்தநிலையில் கபில்தேவ் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி என்னை கடத்தி சென்றார். பின்னர் மீனாட்சிபுரம் அருகே உள்ள ராமர் பண்ணையில் உள்ள கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். பின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்று என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தற்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வருகிறார். இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் செய்த கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 7 மாதங்களாக பலாத்காரம் செய்த கபில்தேவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி பினுவை கைது செய்தனர்.
- வழக்கை விசாரித்த நீதிபதி, பினுவுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள பிரமாடம் பகுதியைச் சேர்ந்தவர் பினு (வயது 26).
இவர் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் இருந்து உள்ளார். அப்போது 15 வயது பழங்குடியின சிறுமி அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பினு, மிட்டாய் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வைத்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றபோது தான் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பினுவை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பினுவுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில் போக்சோ நீதிமன்றம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- நம்பி அந்த சிறுமி வீட்டில் இருந்த சில நகைகளை எடுத்து சென்று லெனினிடம் கொடுத்தார்.
- சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் லெனினுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் லெனின் (வயது 23). பால் வேன் டிரைவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் லெனின் மற்றொரு 16 வயது சிறுமியுடன் நண்பர் போல் பழகினார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சிறுமியிடம் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வருமாறு கூறினார். இதை நம்பி அந்த சிறுமி வீட்டில் இருந்த சில நகைகளை எடுத்து சென்று லெனினிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் சிறுமியை கடத்தி சென்ற லெனின் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி சிறுமி கேட்டபோது சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார், கடத்தல், கொலை மிரட்டல், மோசடி, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லெனின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த 2 வழக்குகளும் தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் முடிவில் லெனின் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் லெனினுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.
இதேபோல் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் லெனினுக்கு கடத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், மோசடி குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொந்தரவு குற்றத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.42 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார். இதைத் தொடர்ந்து லெனினை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக திருமங்கலம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் மதுரம் விசாரித்து வந்தார்.
விசாரணை முடிவடைந்த நிலையில், முத்துக்குமாருக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் ஏட்டு வெங்கடேஷ் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டு தெரிவித்தார்.
- வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி இருப்பதும் தெரிந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி லெனின் குமார் மீது கடந்த மாதம் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுமியின் பெற்றோர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் படித்து வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஊருக்கு வந்த சிறுமியின் தாய், சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றார்.
டாக்டர் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இது பற்றி சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (வயது 30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததுடன், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி இருப்பதும் தெரிந்தது.
லெனின்குமார் குன்னூரில் சிறை வார்டனாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லெனின் குமார் மீது கடந்த மாதம் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.
அதில் லெனின் குமாரின் உறவினர்கள் சிலர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். சிறுமி பலாத்காரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கில் லெனின்குமாரை கைது செய்ய வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
குடியாத்தம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை ஹாசாபி நகரை சேர்ந்தவர் ஆசிப் (வயது 28) பேக்கரி உரிமையாளர்.
இவருக்கும், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு ஆசிப் குடியாத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பேக்கரி கடை நடத்தி வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் இருந்த 17 வயது சிறுமிக்கு யாரும் இல்லாத சமயத்தில், ரோஸ்மில்கில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார் சிறுமி மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.
நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிப்பை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.
- சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ராம மூர்த்தி சிறுமியை திருவிழாவிற்கு அழைத்து சென்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிைலயில் திருவிழாவிற்காக சிறுமி ஊருக்கு வந்தார். ராம மூர்த்தி சிறுமியை திரு விழாவிற்கு அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். பின்னர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது சிறுமியின் தாய்க்கு தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி கடத்தல்
சிவகாசி அருகே உள்ள நதிக்குடியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது 17 வயது மகளை அதே ஊரை சேர்ந்த முத்து முனியாண்டி என்பவர் கடத்தி சென்றதாக மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சூர் அருகே உள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் அபி.
- சிறுமியை பரவக்காட்டை சேர்ந்த டோனி என்கிற ஜாக்கி என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் அபி. இவர் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அதனை கூறி அந்த அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அந்த சிறுமியை பரவக்காட்டை சேர்ந்த டோனி என்கிற ஜாக்கி என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அபி மற்றும் ஜாக்கியை கைது செய்தனர். அவர்களது வசம் இருந்த அந்த சிறுமி மீட்கப்பட்டார். இதேபோல் வேறு பெண்கள் யாரையாவது பாலியல் பலாத்காரம் செய்தார்களா? என்று கைதான இருவரிடமுடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்
- ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
சூலூர்,
சூலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.
இதற்கிடையே காதலி கர்ப்பமானது தெரியவந்ததும் அந்த வாலிபர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு தப்பி சென்று விட்டார். இதுதொடர்பாக சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமியை கர்ப்பமாக்கி தப்பி சென்றது ஓம்பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஓம்பிரகாஷை கைதுசெய்து கோவைக்கு அழைத்து வந்து, சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்
- இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான்.
- அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
நண்பனுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது மூன்று பேரால் காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சில்வானி-சாகர் சாலையில் உள்ள சியர்மாவ் காட்டில் வைத்து இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
15 வயது சிறுமியும் அவரது அவரது 21 வயது ஆண் நண்பரும் அப்பகுதியில் உள்ள வனதேவி கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான். வனப்பகுதிக்குள் வைத்து இருவரையும் சுற்றி வளைத்த அவர்கள் பெண்ணின் நண்பனைக் கடுமையாகத் தாக்கினர். அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மூன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் சிறுமியும் இளைஞரும் வனத்திலிருந்து வெளியேறி சாலையை அடைந்தனர். ஆனால் இளைஞனின் இருசக்கர வாகனத்தின் சாவியை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். எனவே அங்கிருந்து சாலை வழியாக நடந்தே போலீசிடம் சென்றுள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொருவனைத் தேடி வருகின்றனர்.
- வாலிபர் பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
- தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றார். அவரது வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார்.
3 மணி நேரம் கழித்து தனது பிடியிலிருந்து வாலிபர் சிறுமியை விடுவித்தார். சீரழிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்றார்.
வாலிபர் பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.
ஆக்ரோஷத்துடன் வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் இருந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
அவர்களிடமிருந்து தப்பிய வாலிபர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். வெளியே இருந்த சிறுமியின் உறவினர்கள் வாலிபரை வெளியே வருமாறு கத்தி கூச்சலிட்டனர்.
அவர் வெளியே வராததால் ஆத்திரமடைந்து வாலிபர் உள்ளே இருக்கும்போதே வீட்டுக்கு தீ வைத்தனர். தீ வீடு முழுவதும் பரவியது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் சிறுமியின் உறவினர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் வாலிபர் வீடு மீது கற்களை வீச தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது. போலீசார் மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதனை கண்ட கிராம மக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் படுகாயம் அடைந்தனர். மேலும் போலீசாரின் 2 வாகனங்களை தாக்கி தீ வைத்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கிராம மக்களை கட்டுப்படுத்தினர். மேலும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீடு மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரையில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.
மதுரை
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த வாலிபர், மகபூப்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார்.
திருமண ஆசை காட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தெற்கு அனைத்து மாநில காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
மதுரை மேல பனங்காடி-குலமங்கலம் மெயின் ரோடு கருப்பையா புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 19).இவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.