என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அடுக்குமாடி குடியிருப்புகள் தயார்"
- 5687 வீடுகள் கொண்ட 19 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
- ரூ.121.86 கோடி மதிப்பில் 7 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
கோவை :
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.121.86 கோடி மதிப்பில் 1441 வீடுகள் கொண்ட 7 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
ரூ.494.29 கோடி மதிப்பில் 5687 வீடுகள் கொண்ட 19 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் உக்கடம் மற்றும் செல்வபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சி.எம்.சி காலனியில் ரூ.49.4கோடி மதிப்பில் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தெற்கு பேரூர் பகுதியில் ரூ.9.40கோடி மதிப்பில் 112 குடியிருப்புகள், வடக்கு பேரூர் பகுதியில் ரூ.25.70கோடி மதிப்பில் 288 குடியிருப்புகள், எழில் நகரில் ரூ.25.87 கோடி மதிப்பில் 288 குடியிருப்புகள், உக்கடம் குளம் பகுதியில் ரூ.67.26 கோடி மதிப்பில் 708 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சூலூர் செங்கத்துறை பகுதியில் ரூ.4188 கோடி மதிப்பீட்டில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியின் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.