search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர"

    • ஈரோட்டில் நாளை வ. உ. சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட–ப்படுகிறது.
    • கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தேசியக்கொ டியை ஏற்றி வைக்கிறார். அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை(திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டா டப்படுகிறது. ஈரோட்டில் நாளை வ. உ. சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட–ப்படுகிறது.

    நாளை காலை 9.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தேசியக்கொ டியை ஏற்றி வைக்கிறார். அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

    பின்னர் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்க ளுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவர்களை கவுரவிக்கிறார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ -மாணவி கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து விழா நிறைவு பெறுகிறது.

    • சுதந்திரத்தின அமுதப் பெரு விழாவை அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • இதன் விலை ரூ.25 மட்டுமே. இதற்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது.

    பரமத்திவேலூர்:

    சுதந்திரத்தின அமுதப் பெரு விழாவை அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் . இதையடுத்து வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்காக அனைவருக்கும் கொடி எளிதில் கிடைக்கும் வகையில் நாமக்கல் கோட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்தி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் இந்திய தேசியக் கொடியானது விற்பனைக்கு உள்ளது.

    இதன் விலை ரூ.25 மட்டுமே. இதற்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது.இந்திய தேசியக் கொடியை https://www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். தேசியக்கொடி ஆனது தபால்காரர் மூலமாக வீடுகளுக்கு பட்டுவாடா செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடியை ரூ 25 மட்டும் செலுத்தி பெற்றுக்கொண்டு சுதந்திரத்தின் அமுதப் பெரு விழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறு வனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசியக்கொடியை வாங்கிட விரும்பினால் நாமக்கல் கோட்டத்தின் வணிக வளர்ச்சி அலுவலர்களான நாமக்கல் தலைமை அஞ்சலகம் சிவக்குமார் மற்றும் திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம் சங்கர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×