search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் இல்லம்"

    • காலை பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் காரை கூட் ரோடு பகுதியில் இயங்கி வருகிறது.

    இந்த இல்லத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட, பெற்றோர் இல்லாத, மாணவர்கள் 33 பேர் தங்கி சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு சென்று மீண்டும் இல்லத்திற்கு திரும்பாமல் மாயமாகி வருவது தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மாணவன் சிவக்குமார் (வயது 16) ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து பள்ளிக்கு சென்று வந்தான்.

    நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிவக்குமார் மாலை இல்லத்திற்கு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்காததால் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோமதி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரு மாணவன் மாயமாகிய நிலையில் மீண்டும் ஒரு மாணவன் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி நிறுவனம் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற் சாலைகள் தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் தற்காலிக மாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் வருகிற 31-ந் தேதிக்குள் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு சட்டப் பிரிவின்படி 2 ஆண்டு காலம் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

    வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    பதிவு உரிமம் தொடர் பான கூடுதல் விவ ரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவல கத்தை (தொலைபேசி எண்: 04652-278404) தொடர்பு கொள்ளலாம். 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு 3-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×