search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமைச் செயலாளர்"

    • தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க அரசு அலுவலகங்களில் செலவின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய எளிமையான பணிகளைத் தெரிவித்து செயல்படுத்த கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தி முந்தைய நிலையையும் தற்போதைய நிலையையும் நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்தமைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல, நாம் அமர்ந்து பணியாற்றும் அரசு அலுவலகங்களையும் உபயோகப்படுத்தும் ஓய்வு அறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்க செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் மதிய வேளைகளில் உணவருந்தவும் நீர்ப் பருகவும் போதிய வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தனி கவனம் செலுத்தி தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்சொன்ன வசதிகள் தங்கள் அலுவலகத்தோடு நில்லாமல் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு துணை அலுவலகங்களில் செயல்படுத்தும் முகத்தான் நேரடியாக தலையிட்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் எழில்மிகு அரசு அலுவலகமாக திகழவும் அவ்வலுவலகத் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் உணவருந்தவும் போதிய வசதிகளை அந்தந்த அரசு அலுவலகத் தலைமை அலுவலர்கள் மூலம் செய்து கொடுப்பதை உறுதி செய்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் ஓர் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பிரச்சனை நடைபெறாத வகையில் நடவடிக்கை.
    • கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவரது சாதியை காரணமாக காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.  


    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு தலைமைச் செயலாளர் இன்று நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களோடு நேரடியாக கலந்துரையாடினார்.

    தொடர்ந்து பல்வேறு துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றுவது குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சுதந்திர தினத்தன்று இவ்வூராட்சியில் எவ்வித பிரச்சனைகளும் நடைபெறாத வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை தலைமைச் செயலாளர் உறுதி செய்து, தேசிய கொடிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், தலைமைச் செயலாளர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல இடங்களில் பதவி உயர்வு வழங்க கோப்புகள் தயாரிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு தகவல்கள் வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
    • ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்று அல்லது சில நாட்களுக்கு முன்பாக பதவி உயர்வு கிடைப்பதற்காக செயற்கையாக அந்த அலுவலகங்களில் காலிப்பணியிடம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

    இதன் மூலம் அந்த ஊழியருக்கு பதவி உயர்வு வருவதற்கு முன்பே பதவி உயர்வு கிடைத்து விடுகிறது.

    இவ்வாறு ஓய்வு பெறும் சமயத்தில் அவர் பதவி உயர்வு பெற்றால் முழு சேவை செய்யாமலேயே அதற்கான முழு சம்பளம் உள்ளிட்ட பணப்பயனை பெற்று விடுகிறார்.

    இவ்வாறு பல இடங்களில் பதவி உயர்வு வழங்க கோப்புகள் தயாரிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு தகவல்கள் வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

    இதன் மூலம் தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ அல்லது ஓய்வு பெறும் நாளன்று பதவி உயர்வுக்கான அவரது முறை வருவதற்கு முன்பே பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்த கூடாது.

    அதாவது விடுமுறையில் சென்று காலிப்பணியிடத்தை உருவாக்குவது, தற்காலிக பதவி உயர்வு வழங்குவது போன்று செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து நியமன அலுவலர்களும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×